Sunday, September 20, 2020

Look, Watch, and See இந்த மூன்றிற்கும் இடையிலான வித்தியாசம் தெரியுமா?

 


Look, Watch, and See இந்த மூன்றிற்கும் இடையிலான வித்தியாசம் தெரியுமா?

Merriam Webster Learners’ Dictionary இந்த மூன்று வார்த்தைகளுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பதனை பின்வருமாறு விளக்குகிறது.

  • See என்பது உங்களது கண்களால் ஏதேனும் ஒரு நபரை அல்லது ஏதேனும் ஒரு பொருளை அறிந்து கொள்ள பார்ப்பது ஆகும்.
  • Look உங்களது பார்வையினை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்துவதனைக் குறிப்பதாகும்.

  • Watch என்பது ஒருவரை அல்லது ஏதேனும் ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட நேரம் வரையில் பார்த்து, என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதனைக் குறிக்கிறது.

Watch

ஒரு சிறிய எடுத்துக்காட்டின் மூலம் பார்க்கலாம்.

இரு நண்பர்கள் டீக்கடையில் பேசிக்கொள்கிறார்கள் என கற்பனை செய்துகொள்ளுங்கள்.

முதல் நண்பர்: நண்பர் ஒருவர் வந்துள்ளார் அவரிடம் பேசிவிட்டு விரைவில் வருகிறேன். அதுவரை எனது பையினை பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

Friend 1: I have some friend I will comeback in a minute.Would you please watch my bag?

இந்த இடத்தில் நாம் watch சொல்லினைத் தான் பயன்படுத்த வேண்டும். காரணம் நண்பர் வரும் வரை நாம் அதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதனால். இது போக திரைப்படம் பார்ப்பது, விளையாட்டு போன்றவற்றினைக் குறிப்பிட நாம் இந்த சொல்லினைத் தான் பயன்படுத்த வேண்டும்.

யாரேனும் ஒரு நண்பர் உங்களிடம் பின்வரும் கேள்வியினைக் கேட்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்.

Frd 1: Are you ready to play with me?

நீ என்னுடன் விளையாடுவதற்கு தயாரா?

இந்தக் கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்.

அதற்கு நீங்கள் வேண்டாம் பா நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்

No, I’ll just watch.

எனச் சொல்வதற்கும் நீங்கள் watch பயன்படுத்த வேண்டும்.


 Look

Look என்பது watch எனும் வார்த்தையில் இருந்து வேறுபட்டு அமைந்துள்ளது. ஒரு பொருளையோ அல்லது நபரையோ நோக்கி உங்களது கண்களை செலுத்துவதாகும். இது குறைந்தபட்ச நேரம் கொண்டதாக இருக்கும். மேலும், அதில் பார்க்கும் நபர் தனது சிந்தனையினை செலுத்துவதாக இருக்காது. மேலும், look என்பது பெரும்பான்மையாக adverb or preposition என்பதனைத் தொடர்ந்து வரும்.

When you dance, don't look down. (நடனம் ஆடும் போது கீழே பார்க்க வேண்டாம்)

She looked at the bill before she paid it. (அவள் பணம் செலுத்துவதற்கு முன்பாக அந்த தொகையினைப் பார்த்தாள்)

See

preposition அல்லது adverb ஆகிவற்றுடன் see என்பதனைப் பயன்படுத்தத் தேவையில்லை. மேலும், இந்த வார்த்தையுடன் சில சமயங்களில் object வரும் சில சமயங்களில் வராது.

object உடன் - I see a cat in the window. (சன்னல் அருகே நான் ஒரு பூனையினைப் பார்க்கிறேன்)

Without an object - It will rain today - just wait and see. (இன்று மழை பெய்யும் பொறுத்திருந்து பாருங்கள்)

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளும் அதற்கான அர்த்தங்களும்

proper - adj. (grammar) exactly correct

noticev. to become aware of (something or someone) by seeing, hearing, and so on

awareadj. feeling, experiencing, or noticing something (such as a sound, sensation, or emotion) — often + of

adverbn. a word that describes a verb, an adjective, another adverb, or a sentence and that is often used to show time, manner, place, or degree

prepositionn. a word or group of words that is used with a noun, pronoun, or noun phrase to show direction, location, or time, or to introduce an object

object - n. (grammatical) a noun, noun phrase, or pronoun that receives the action of a verb or completes the meaning of a preposition

conversation - n. an informal talk involving two people or a small group of people

 


 


No comments:

Post a Comment

கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்

 கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்