மருத்துவக் கல்லூரிகளில் சேருவது என்பது எப்போதுமே கவுரவமான விஷயமாகவே இருந்தது. ஏனெனில், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் சிறப்பான கற்றல் திறன்களை/ மதிப்பெண்களைப் பெற்றவரை மட்டுமே அனுமதித்தது. ஆனால் "நீட்" டின் வருகைக்குப் பின்னர் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்களைப் பெற்ற 400 க்கும் மேற்பட்ட மாணவர்களும், பூஜ்ஜிய அல்லது நெகட்டிவ் மதிப்பெண்கள் பெற்ற 110 மாணவர்களும் 2017 ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
எந்த அடிப்படையில் தனியார் கல்லூரிகள் மாணவர்களை அனுமதிக்கின்றன
இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற தனிப்பட்ட பாடங்களில் NEET இல் தனித்தனி கட் ஆப் மதிப்பெண்கள் இல்லை என்பதால், இயற்பியல் மற்றும் வேதியியலில் வெறும் ஒற்றை இலக்க மதிப்பெண்களைப் பெற்ற 400 க்கும் மேற்பட்ட மாணவர்களும், பூஜ்ஜிய அல்லது நெகட்டிவ் மதிப்பெண்கள் பெற்ற 110 மாணவர்களும் பெரும்பாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS இடங்களைப் பெற்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. இதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு குறைந்தபட்ச பாட அறிவுகூட தேவைப்படாதா? எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் 1990 மாணவர்கள் நீட் மதிப்பெண்களைக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் 530 மாணவர்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்களைப் பெற்ற 400 க்கும் மேற்பட்ட மாணவர்களும், பூஜ்ஜிய அல்லது நெகட்டிவ் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் ஆவர். இந்த 530 இல் 507 மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவர்கள் ஆண்டிற்கு 17 இலட்சம் ரூபாய் கட்டணமாக (இதில் விடுதி, உணவு, நூலகம் மற்றும் இதர கட்டணங்கள் அடங்காது) கல்லூரிகளுக்கு கொடுக்கின்றனர். இதில் இருந்தே மருத்துவம் படிக்க என்ன "தகுதி" வேண்டும் என்பது தெரிகிறது.
நீட்டின் மறு அறிவிப்பு தான் இதற்கு காரணமா?
டிசம்பர் 2010 இல் அறிவிக்கப்பட்ட நீட் அறிவிப்பில் மாணவர்கள் குறைந்தபட்சம் குறிப்பிட்ட பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெ ண்கள் பெற்றிருக்க வேண்டும் ( reserved category 40 சதவீத மதிப்பெண்கள்) என இருந்தது. (பின்னர், சதவிகித அமைப்பைச் சேர்க்கும் வகையில் அறிவிப்பு கைவிடப்பட்டது.) ஆனால் இந்திய மருத்துவ கழகத்தின் அறிவிப்பின்படி இத்தகைய மதிப்பெண்கள் ஏதும் நிர்ணயம் செய்யப்படாத காரணத்தால் மிகக் குறைந்த அல்லது பூஜ்ஜிய மதிப்பெண்கள் எடுத்தவர்கள் கூட மருத்துவ கல்லூரிகளில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீட் என்பதே தனியார் கல்லூரிகளில் வெளிப்படைத் தன்மையுடன் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படது. ஆனால் தற்போது மதிப்பெண்களுக்குப் பதிலாக பணம் இருந்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment