உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் சகுந்தலா தேவியின் சாதனையினை முறியடித்த இந்திய கணித மேதை நீலகந்தா பானு
நீலகந்தா பானு பிரகாஷ் இவர் டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் கணித பிரிவில் இலங்கலைப் பட்டம் பயின்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இலண்டனில் நடந்த Mind Sports Olympiad போட்டியில் லண்டன், ஜெர்மனி . ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த 30 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் நீலகந்தா பானு பிரகாஷ் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் இதில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
கணிதத்தின் மீது தனக்கு தீராத காதல் இருப்பதாகவும், கணிதத்தின் மீது பரவலாக மாணவர்களுக்கு இருக்கும் பயத்தினைப் போக்கி, எண்கணித கற்றல் மூலம் மாணவர்களிடையே அறிவாற்றல் திறன்களை ஆராய மாணவர்களுக்கு உதவுதல், மற்றும் கணித கற்ற்றல் சூழலை மகிழ்ச்சியாக்குவதே எனது நோக்கம் எனக் கூறியுள்ளார்.
இவர் கணிதத்தில் இந்தியாவின் கடந்தகால மகிமையினை மீண்டும் கொண்டுவர விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும் Fastest Human Calculative Weed record எனும் சாதனையினை இவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்தச் சாதனையினை சகுந்தலா தேவி மற்றும் ஸ்கார் பிளான்ஸ்பர்க் ஆகியோர் படைத்துள்ளனர்.
தனது 5வயது முதலே கணிதத்தின் மீது ஆர்வம் கொண்டவராக திகழ்ந்துள்ளார். இவர் 4 முறை உலக சாதனை புத்தகத்திலும் 50 முறை லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். மேலும் அபாகசில் 9 நிலைகளைக் கடந்துள்ளார்.
2011 ,2012 ஆம் ஆண்டுகளில் National Abacus Champion
2013 - International Abacus Champion
2015 - Math Genius Award.
இவர் Exploring Infinities எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தினை தெலுங்கானா அரசுடன் இணைந்து நடத்திவருகிறார். இதுவரையில் 10,000 மாணவர்களுக்கு இவர் உதவியுள்ளார்.
No comments:
Post a Comment