Thursday, August 6, 2020

கோவிட்-19 தொற்று காலத்தின் போது குழந்தைகளின் மனநலனைப் பாதுகாப்பது எப்படி?

image credits: Bricks 4
இது இந்தியா டுடே ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்.

பெரும்பான்மையான விடுமுறை காலங்களில் குழந்தைகள் வீட்டில் தங்காமல் வெளியில் சென்று விளையாடுவதனையே வழக்கமாகக் கொண்டிருப்பர். அதாவது அவர்களால் வீட்டிலேயே அடைந்திருக்கப் பிடிக்காது. ஆனால் இந்த தொற்று சமயத்தின் போது வேறுவழியின்றி அவர்கள் வலுக்காட்டாயமாக வீட்டில் தங்க வைக்கப்படுகிறார்கள். இந்த சமயத்தின் அவர்களது மன்நலனைப் பேணிக்காப்பது எப்படி என்பதனை இந்தக் கட்டுரையில் காணலாம்.

இந்தத் தொற்றுக் காலத்தில் பெரியவர்களே தங்களது பல சிக்கல்களை நினைத்து கவலைப் படும் வேளையில் அது குழந்தைகளும் விட்டுவைப்பது கிடையாது. தற்போதைய சூழ்நிலையில் 'இயல்பு வாழ்க்கை' என்பது எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது.எனவே இது குழந்தைகளின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவே அறியப்படுகிறது.

இதில் இருந்து தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய ஐந்து செயல்களைக் கீழே காணலாம்.

  1. குழந்தைகளிடம் பேசுங்கள்

  2. Children with speech and language communication needs

குழந்தைகள் சுற்றுப் புறத்தில் நடக்கும் நிகழ்வுகளால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். இந்தத் தொற்றுக் காலத்தின் போது பொதுவாக நம்மிடையே ஏற்படும் பயம் மற்றும் மன அழுத்தங்கள் குழந்தைகளிடமும் ஏற்படுவது இயல்பே.

இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தவறாமல் அடிக்கடி பேச வேண்டும். அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது, அது ஏன் நடக்கிறது, அந்த விஷயங்களினால் ஏற்படும் விளைவுகள் ஏதேனும் இருந்தால் அதுபற்றி அவர்களிடம் பேச வேண்டும்.

இதன்மூலம் பொய்யான தகவல்கள் அவர்களைச் சேர்வதைத் தடுக்க முடியும். சமூகத்தில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் எதுவாயினும் அதுபற்றி உங்களுடைய குழந்தைகளிடம் வெளிப்படையாகப் பேசுங்கள்.

2. குழந்தைகளின் செய்கைகளைக் கவனியுங்கள்


Baby sign language: A guide for the science-minded parent

குழந்தைகளின் செய்கைகளை பெற்றோர்கள் உன்னிப்பாகக் கவனித்தல் வேண்டும். அவர்களின் நடத்தையில் ஏதேனும் சற்று வித்தியாசமான மாற்றங்களைக் கண்டால் உடனே பெற்றோர்கள் அதுபற்றி குழந்தைகளிடம் தெரிவித்தல் வேண்டும்.

சிலசமயம் குழந்தைகள் தாங்கள் கூற வருவதனை வார்த்தைகளால் அன்றி செய்கைகளின் மூலமே பெற்றோர்களுக்குத் தெரிவிக்க விழைவர்.

எனவே பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் இந்த அறிகுறிகளை உடனடியாக அறிந்துகொண்டு அதன் பின்னணியில் உள்ள காரணங்களைக் கண்டறிய வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளை பேசுவதன் மூலமோ அல்லது அவர்களின் சந்தேகத்தினை தீர்ப்பதன் மூலமோ நிவர்த்தி செய்ய முடியுமானால், பெற்றோர்கள் உடனடியாக அது பற்றி மூலம் குழந்தையுடன் பேச வேண்டும்.

3. சமூக ஊடக தொடர்புகளை கட்டுப்படுத்துங்கள்

Parental control – Social Media protection for your children ...

சமூக ஊடகங்கள் உலகத்தை மறுக்கமுடியாத வகையில் மாற்றியுள்ளன, உலகெங்கிலும் பரவலாக உள்ள மக்களை ஒன்றிணைக்கின்றன. இது மக்கள் எவ்வாறு சரியான வாழ்க்கையை தேர்வு செய்வது என்பதனைக் காட்டுகிறது ஆனால் அதில் மறைந்திருக்கும் பல சிக்கல்களை தன்னுள்ளே மறைத்து வைத்திருக்கிறது.

சில நேரங்களில், இது எதார்த்த வாழ்க்கையின் மாற்றுகளை மனிதர்களை நம்பச் செய்கிறது. இதனால் அவர்கள் மனச்சோர்வு அடைகின்றனர். தங்களது ஆர்வத்தினை இழக்கிறதோடு தம்மால் இந்தச் செயல் செய்ய இயலாமல் போய்விடுகிறதோ என்று எண்ணச் செய்ய வைக்கிறது.

தற்போது வரும் பல அண்மைச் செய்திகளால் (Flash News) அவர்கள் மனதளவில் பாதிக்கப்படலாம். எனவே அவற்றினைக் கட்டுப்படுத்துங்கள்.

4. கணிவுடன் சில செயல்பாடுகளைச் செய்யச் சொல்லுங்கள்

25 Cheap Summer Activities for Kids | Parents

சோம்பேறியின் மனம் பிசாசு குடியிருக்கும் வீடு என்று கூறப்படுகிறது. எனவே

இந்தத் தொற்றுக் காலகட்டத்தில் அவர்களின் கல்வி சார்பாகவோ அல்லது குறும்புத் தனமாக செய்யும் சில செயல்பாடுகளை அவர்களைச் செய்யச் செய்யுங்கள்.

இதன் மூலம் குறைந்தபட்சம் அவர்களது மனநிலையினை இந்தத் தொற்று பயத்தில் இருந்து விடுதலை பெறச் செய்யும். குறும்புத் தனமான செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் பெற்றோர், குழந்தைகளுக்கு இடையேயான பிணைப்பு அதிகமாகும். மேலும் குழந்தைகளுடன் நேரத்தினைச் செலவிட வைக்கும்.

5 .பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் நம்பிக்கை, உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்


Our Amazing Capacity to Trust | Choose to Trust

எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த பிறகும், மனநல பிரச்சினைகள் எழக்கூடும். இது பராமரிப்பாளர்களின் தவறு காரணமாக அல்ல, நாம் வாழும் தற்போதைய வேகமான சூழல்களால் இவ்வாறான பிரச்சினைகள் எழலாம்.

குழந்தை என்ன நடக்கிறது என்பதனை ஒளி மறைவின்றி உங்களிடம் தெரிவிக்கும்பட்சத்தில் அவர்களின் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருத்தல் அவசியமாகிறது.

நீங்கள் அவரைக் கலந்து ஆலோசிக்கிறீர்கள், அவர்களுடைய கருத்துக்களை மதிக்கிறீர்கள், அவருடைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும்.

இது குழந்தைகளை பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வைத் தரும், இது அவர்களை நேர்மறையாக சிந்திக்கத் தூண்டும்.


(india today: by Rajiv Bansal, Director-Operations, GIIS India)

தமிழாக்கம்: ஸ்ரீ

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms