வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நூலக தகவல் உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஸ்டெனோகிராஃபர் மற்றும் மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 15, 2020 ஆகும்.
விளம்பர எண் :1 / FRI / GC / 2020 இன் படி, வன ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிக்கை 2020 இன் கீழ் மொத்தம் 107 காலியிடங்கள் காலியாக உள்ளது. இதில் 40 காலியிடங்கள் மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (எம்.டி.எஸ்), 62 தொழில்நுட்ப உதவியாளர், ஸ்டெனோ பணியாளர்கள் 4 மற்றும் நூலக தகவல் உதவி பணியாளருக்கு 1 ஆகிய இடங்கள் உள்ளன.
முக்கிய நாட்கள்
விண்ணப்பத்தின் தொடக்க தேதி - ஆகஸ்ட் 17, 2020
விண்ணப்பத்தின் கடைசி தேதி - செப்டம்பர் 15, 2020
காலியிட விவரங்கள்
மொத்த காலியிடங்கள் - 107
நூலக தகவல் உதவியாளர் - 1 பதவி
தொழில்நுட்ப உதவியாளர் - 62 இடங்கள்
ஸ்டெனோகிராபர் - 4 இடங்கள்
மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் - 40 இடங்கள்
தகுதி வரம்பு
கல்வி தகுதி:
நூலக தகவல் உதவியாளர் - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப உதவியாளர் - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஸ்டெனோகிராபர் - அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 வது தேர்ச்சி சான்றிதழ். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநரால் நடத்தப்பட்டிருக்க வேண்டிய போட்டித் தேர்வில் ஆங்கிலம் / இந்தியில் நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 80 சொற்களை டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் - அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
நூலக தகவல் உதவியாளர் - 18 முதல் 27 வயது
தொழில்நுட்ப உதவியாளர் - 21 முதல் 30 வயது
ஸ்டெனோகிராபர் - 18 முதல் 27 வயது
மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் - 18 முதல் 27 வயது வரை
எப்படி விண்ணப்பிப்பது
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://frirecruitment.icfre.gov.in இல் ஆகஸ்ட் 17 முதல் 2020 செப்டம்பர் 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment