Thursday, July 23, 2020

கொரோனா காலத்தில் உங்கள் குழந்தைக்கு இதனைக் கற்றுக் கொடுத்தீர்களா?

இதன் ஆங்கிலக் கட்டுரையினை எழுதியவர் சௌனி புரூஸ்( ஜூலை 14, 2020) இதனை மருத்துவ ரீதியாக ஆய்வு செய்தவர் அலெக்ஸ் க்ளீன் PsyD

கற்றல் என்பது பின்னங்கள் மற்றும் வரலாற்று உண்மைகள் மட்டுமல்ல அதனை விடவும் பல்வேறு விஷயங்கள் கற்றுக் கொள்வதற்கு இந்த உலகத்தில் உள்ளன.இந்தக் கொரோனா காலத்தில் உங்கள் குழந்தைகளை வாழ்க்கைக்கு தயார்படுத்த சரியான நேரம் இது. வாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கீழ்கானும் விசயங்கள் தெரிந்துள்ளனவா? என்பதனைக் கானலாம்.

தற்போது COVID-19 quarantine காலத்தில் குழந்தைகள் விட்டில் இருந்தே மெய்நிகர் வகுப்புகள், வீடியோ பாடங்கள் மூலமாகவே கற்றல் செயல்களில் ஈடுபடுவதால் அவர்களின் பழைய உற்சாகம் குறைந்து கொண்டே வருவதனைக் காண முடிகிறது. சொல்லப் போனால் கற்பித்தல் செய்ல்களுக்கு தயாராகும் ஆசிரியர்களே கூட பழைய உற்சாகமின்றி தான் ஈடுபட்டு வருகின்றனர்.

நடைபயிலும் குழந்தைகள், புகுமுகப் பள்ளி மாணவர்கள் (Toddlers, Pre-schoolers)

பொம்மைகளை தொட்டியில் வைத்தல்

நடைபயிலும் குழந்தைகள் பொதுவாகவே கூடைகளில் பொருட்களை நிரப்புவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர். ஒருகுழந்தை அதில் இருந்து பொருட்களை எல்லாம் எடுத்து கீழே போடுவதில் குறியாக இருக்கும். அவ்வாரு அவர்கள் அந்த கூடைக்குள் அல்லது பெட்டிக்குள் பொருட்களையோ அல்லது பொம்மைகளையோ சரியாக போடும் போது அவர்களை பாராட்டுங்கள்.

அழுக்குத் துணிகளை தனியாக வைத்தல்

அழுக்குத் துணிகளை தங்களது ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனியாக ஒரு இடம் ஒதுக்கி அவர்களுக்கான இடத்தில் அவர்களின் அழுக்குத் துணிகளை போட்டு வைக்கச் செய்யுங்கள். அவர்கள் நடைபயிலும் குழந்தைகளாகவே இருந்தாலும் அவர்களையும் பழக்கச் செய்யுங்கள்.

ஆடைகளை அவர்களாகவே அணியச் செய்யுங்கள்

அவர்களது ஆடைகளை அவர்களிடமே கொடுத்து அணியச் செய்யுங்கள். தற்போது கொரோனா காலத்தில் அனைவருமே வீட்டில் இருப்பதால் அவர்கள் தவறாகவே ஆடை அணிந்தாலும் அதனை யாரும் பார்க்க மாட்டார்கள் தானே?

பாத்திரங்களைப் பயன்படுத்தச் செய்தல்

குழந்தைகளை தாங்கள் பயனபடுத்தும் பாத்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி இந்த விடுமுறைக் காலத்தில் சொல்லிக் கொடுங்கள்.

NO KISS, NO HUG

தற்போது சமூகத்தில் நடக்கும் அவலத்தினைப் பார்க்கையில் பெண் குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகச் சவாலான ஒன்றாகவே இருக்கும். எனவே Good Touch Bad Touch பற்றி நீங்கள் சொல்லிக் கொடுப்பது முக்கியமானதாகும்.

கைகளை முறையாக கழுவ கற்றுக் கொடுங்கள்

கைகளை முறையாக அடிக்கடி கழுவ கற்றுக் கொடுங்கள்.

பதில் சொல்லக் கற்றுக் கொடுங்கள்

உதாரணமாக உறவினர் ஒருவர் குழந்தையிடம் எவ்வளவு வயது எனக் கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பது போன்றது.

ஆரம்பப் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு

ஆபத்தான காலத்தில் செயல்படும் முறை

உதாரணமாக வீட்டில் தீப் பிடித்தால் என்ன செய்ய வேண்டும், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் போது அவர்களால் செயல்பட முடியாத போது என்ன செய்ய வேண்டும் அவரசர எண்கள் எவை எந்த உதவிக்கு எந்த அவசர எண்ணை அழைக்க வேண்டும் ஆகியன.

செல்போன் நம்பரை அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்

இன்று நம்மில் எத்தனை பேருக்கு நமது குடும்பத்தில் உள்ள எல்லோரது செல்போன் எண்களை மனப்பாடமாக வைத்துள்ளோம் எபச் சொல்லுங்கள்? கேட்டால் அதான் போன்ல இருக்குல்ல பின்ன என்ன? என்ற பதிலே வரும். ஆனால் நமது குழந்தைகள் ஏதேனும் நம்மை விட்டு தனியாக போகும் சூழ்நிலை ஏற்பட்டால் ? எனவே பெற்றோர் இருவரது எண்ணையும் அவர்களை மனப்பாடமாகச் சொல்லச் செய்யுங்கள்.

குழந்தைகளுக்காக புதிய ஒரு தினத்தை உருவாக்குங்கள்

மாதம் ஒரு முறை உங்கள் குழந்தைகளுடன் அவர்களின் மனநலத்தினைப் பேணிக் காக்கும் விதமாக ஒரு நாளினை நீங்களே உருவாக்குங்கள். உதாரணமாக " அம்முவுக்காக ஒரு நாள்".

சுயமாக முடிவு எடுக்கச் செய்தல்

இந்தப் பருவம் தான் குழந்தைகளை சுயமாக முடிவு எடுக்கச் செய்ய சரியானது. மேலும் அவர்களுக்கான வாய்ப்பினை நீங்கள் வழங்குங்கள். குறிப்பாக அவர்கள் "வேண்டாம்" எனச் சொல்ல அனுமதியுங்கள்.

இனப் பாகுபாடு பற்றி பேசுங்கள்

என்ன! இது பற்றி எப்படி ஆரம்பப் பள்ளி செல்லும் குழந்தையிடம் எப்படி பேச முடியும் என கேட்பது புரிகிறது? ஆனால் இது பற்றிய அடிப்படைத் தகவ்லகளைக் கூறினால் அவர்கள் தரும் பதில் ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால் இதுதான் இனப்பாகுபாடு என்பது தெரியாமலே அவர்கள் அதனைச் சந்தித்திருப்பார்கள்.

நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பதின் பருவத்தினர்

நன்றி தெரிவிக்கும் அட்டை

நன்றி தெரிவிக்கும் அட்டைகளை அவர்களையே தயாரிக்கச் செய்யுங்கள். அதன்மூலம் அவர்களது நன்மதிப்பும் உயரும்.

கடிதம் எழுதச் செய்தல்

கடிதம் எழுதும் போது முகவரியினை எழுதச் செய்யுங்கள். இதன் மூலம் எந்த இடத்தில் முகவரி எழுத வேண்டும் என்பதனை தெரிந்துள்ளார்களா? என்பதோடு நமது வீட்டு முகவரியினை அவர்கள் தெரிந்துள்ளார்களா? என்பதனையும் நாம் அறிந்துகொள்ளலாம்.

ஊக்கமளியுங்கள்

நண்பர் ஒருவரது பெண்குழந்தை தான் படித்த அனைத்து கதைகளிலும் ஆண்களே முக்கியக் கதாப்பத்திரத்தில் இருப்பதாக கவலை கொண்டாராம். இவ்வாறான சூழ்நிலையில் நீங்கள் ஊக்கமளிக்கும் விதமாக பெண்களை மையமாகக் கொண்ட கதைகளைக் கூறுங்கள்.

செல்போனில் பேசக் கற்றுக் கொடுங்கள்

இதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன? ஆமாம். நிச்சயமாக, உதாரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் முன் முன் அனுமதி பெறுவது எப்படி என்பது பற்றி கூறி அவர்களையே பேசச் செய்யுங்கள். இதன்மூலம் மற்றவர்களிடம் எந்த விதத்தில் பேச முடியும் என்பதைக் கற்றுக் கொடுக்கலாம்.

மன்னிப்புக் கேட்க கற்றுக் கொடுங்கள்

இது சற்று சிரமமான விஷயம் தான். ஏனென்றால் பதின் பருவ வயதில் உள்ளவர்கள் மன்னிப்பு கேட்பதை அவமானமாக எண்ணத் தோன்றும். எனவே அவர்களிடம் பக்குவமாக எடுத்துப் பேசி எந்த வகையில் நாம் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதனைத் தெரிவியுங்கள்.

காய்கறிகளை தேர்வு செய்தல்

இது பெரும்பாலான கணவர்களுக்கு இப்போதும் கைவராத ஒன்று. எந்த காயறிகளை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள். ஆண் குழந்தைகளுக்குமா என்று கேட்டால், அட அவங்களுக்குத் தாங்க முக்கியமா கற்றுக் கொடுக்கனும் பின்னாளில் பயன்படும்.😜

உண்மையான தகவல்களை ஆன்லைனில் எப்படி பார்ப்பது ?

அண்மைக் காலத்தில் வாட்சப்பில் பார்க்கும் அனைத்துத் தகவல்களும் உண்மை என நம்பக் கூடிய காலகட்டம் இது. எனவே அவை உண்மையானதா என்பதை எவ்வாறு பார்ப்பது? எந்தத் தளத்தில் இருக்கும் தகவல்கள் உண்மையானவை என்பதனை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

மகிழ்ச்சியாக இருக்கச் செய்யுங்கள்

சின்ன விசயங்களில் இருந்தும் எவ்வாறு மகிழ்ச்சியினைக் காண்பது என்பது பற்றி கற்றுக் கொடுங்கள்.

sources



No comments:

Post a Comment

கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்

 கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்