இந்தியாவில் கல்வி கட்டணமே வசூலிக்காத பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பணத்திற்குப் பதிலாக மாணவர்கள் நெகிலி (பிளாஸ்டிக்கினை) கொண்டு வந்து கொடுக்க வேண்டும். வாரத்திற்கு குறைந்தபட்சம் 25 நெகிழிகளையாவது கொடுக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள இந்தப் இந்தப் பள்ளியினை அசாம் மாநிலத்தில் உள்ள அக்சரா ஃபோரம் எனும் தம்பதியினர் நிறுவியுள்ளனர். இதனைப் பற்றி அந்த நிறுவனரான பார்மிதா ஷர்மா கூறுகையில் இங்கு பிளாஸ்டிக் என்பது பெஉம் பிரச்சினையாக உள்ளது. குளிர்காலத்தில் மானவர்கள் குளிர்காய பிளாஸ்டிக்கினை எரித்து வந்தது தெரிந்தது. எனவே அந்த பிளாஸ்டிக்கினை எரிக்க வேண்டாம் எனவும் அதனை தங்களது பள்ளிக்கு கொடுக்க வேண்டும் எனவும் கூறினோம். அதன்படி கொடுக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்து பசுமை செங்கற்களை செய்தனர். மாணவர்கள் பணம் கட்ட வசதியில்லாததால் கல்வியினை பாதியில் விடுகின்றனர். எனவே நாங்கள் பணம் ஏதும் பெறாமல் அவர்களின் கல்விக்கு உதவுவதுடன் பொருளாதார வளர்ச்சிக்கும் நாங்கள் உதவுகிறோம். இங்கு மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். மேலும் தொழிற்பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகிறது.20 மாணர்களுடன் துவங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 100 பேர் படிக்க்கின்றனர்.
ஆதாரம்:bbc.com
No comments:
Post a Comment