Tuesday, July 28, 2020

ஆசிரியர்களுக்கு பயனுள்ள வலைத்தளங்கள்

இந்தப் பதிவில் ஆசிரியர்கள் தங்களது கற்றல் கற்பித்த செயல்பாடுகளை அடுத்த  நிலைக்கு எடுத்துச் செல்வதற்கும் நவீன கற்பித்தல் முறைகளைக் கையாள்வதற்கு உதவும் சில பயனுள்ள இலவச வலைத்தளங்களை காணலாம்.


 கணிதம், வேதியியல் , இயற்பியல், கலை  ஆகிய பிரிவுகள் உட்பட பாடங்களுக்கு விளக்கங்களையம் , பயிற்சிகளையும் வீடியோவாக கொடுக்கும் ஓர் வலைத்தளம் ஆகும். இது ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள் ஆகிய அனைவருக்கும் உபயோகமான  தகவல்களைக் கொண்டுள்ளது .

2. ReadWriteThink
இந்த வலைத்தளம்  வகுப்பறை கற்றலுக்கான கல்வி வளங்களை வழங்குகிறது. மேலும் மாணவர்களுடன் இணைந்து செயல்படவும், பாடக் குறி ப்புகள், கற்பித்தல் வளங்களை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும், மொபைல் செயலிகள் மற்றும் கற்பித்தல் சிக்கல்களுக்கான வழிகாட்டல்கள் போன்றவற்றையும் இந்த வலைத்தளம் வழங்குகிறது.

இந்த வலைத்தளம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு செயலிகள் , கருவிகள், படங்கள், நூல்கள் போன்றவற்றினைப் பற்றிய விமர்சனங்களை பார்க்க உதவும் வலைத்தளம் ஆகும். இதன்மூலம் நமது குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப என்னமாதிரியான செயலிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி நாம் முன்னரே அறிந்துகொண்டு அது அவர்களுக்குத் தேவையானதா? என அறியலாம். ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான பாடக் குறிப்புகளைப் படித்துக் கொள்ளாவும், வலையரங்கு (webinar) கற்றல் தொடர்பான வீடியோக்கள் போன்றவை இந்தத் தளத்தி கிடைக்கும்.

4- CK-12

பாடங்கள், செயல்பாடுகள், ஆய்வு வழிகாட்டிகள் மற்றும் பயிற்சிகள் ஆகிய STEM உள்ளடக்கத்தை இந்த வலைத்தளம் வழங்குகிறது.


5- Smithsonian Learning Lab

இந்த வலைத்தளமானது கல்வியாளர்கள் தங்களது கற்றலை அறிந்துகொள்வதற்கும் , கற்றல் தொடர்பான புதிய எண்ணங்களை உருவாக்குவதற்கும் தங்களுக்குத் தேவையான கற்றல் வளங்களை தேடுவதற்கும் அதனை பயன்படுத்திக் கொள்ளவும் கல்வி வலைத்தளங்களை உருவாக்குவதற்கும் இந்த வலைத்தளம் பயன்படுகிறது.

6- OER Commons

என்பது கல்வி வளங்களை அனைவரும் பயன்படுத்துவதற்கான ஒரு பொது மின் நூலகம் ஆகும். மேலும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றவும். புதிய கற்றல் வளங்களை உருவாக்கும் இந்த இணையதளம் பயன்படுகிறது.

7- Discovery Education

கற்றல் வளங்கள், மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்துவதற்கான கருவிகள் மற்றும் ஆசிரியர்களின் தொழில்முறை நடைமுறையை வளர்க்க உதவும் கூட்டு கற்றல் அனுபவங்களுக்கான வாய்ப்புகளை இந்த வலைத்தளம் வழங்குகிறது.

8- TED Ed

ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வீடியோ பாடங்களை அணுகவும் உருவாக்கவும் உதவும்வலைத்தளம் ஆகும்.

9- Edshelf

கற்றல் கற்பித்தலுக்கான மொபைல் செயலிகள், கணினி மென்பொருட்கள் மற்றும் மின்னனு பொருட்கள் ஆகியவற்றை கண்டறிய பயன்படும் வலைத்தளம் ஆகும்.

10- Symbaloo EDU

கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுக்குப் பயனுள்ள கல்வி தொடர்பானவற்றை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள இது உதவுகிறது. மேலும் தேவையானவற்றை உள் நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொண்டு பயனர்கள் தங்களது செல்போன் அல்லது கணினி மூலமாக எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Related Posts:

இலவச கல்வி மென்பொருள்கள் 

Alternative for ZOOM app (ZOOM செயலிக்கு மாற்றாக உள்ள செயலிகள்)

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms