Sunday, May 17, 2020

QUOTES- TEACHER

ஆசிரியர் 


 (ஆசு = தவறு ; இரியர் = திருத்துபவர்) எனப்படுபவர் மற்றவர்களுக்கு பள்ளிக்கூடமொன்றில் கல்வி கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் தனிப்பயிற்சியாளர் என அழைக்கப்படுகிறார்.

  • ஆசிரியன் ஒருவன் தான் படித்ததை மறவாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல; தனது அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள மேலும் சகல விஷயங்களையும் கல்வி மூலமாகவும், அனுபவம் சார்பாகவும் கற்றுக் கொண்டே வரவேண்டும். இதுதான் ஓர் ஆசிரியனுக்குரிய அடிப்படை இலக்கணம். அதை விடுத்து, மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் போதாது, பல விஷயங்களையும் கற்றுத் தனது நினைவில் வைத்துக் கொண்டிருப்பவன் ஆசிரியன் என்ற பொருளுக்கே உரியவன் அல்லன்
  • குழந்தைகள் படிக்க ஆசைப்படுவதையே அவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தல் வேண்டும். அதை விட்டுவிட்டு, வயது முதிர்ச்சி அடைந்தவர்களது ஞானத்தை எல்லாம் கற்பிக்க முயல்வது கூடாது. இப்படிச் செய்தால், அதே குழந்தைகளிடம் தாங்கள் படிக்கவேண்டும் என்ற இயல்பான ஊக்கம், ஆர்வம் எல்லாம் பாழ்பட்டுப்போகும் என்பதை உணரவேண்டும். கல்வி மீது ஆர்வத்தை உருவாக்குவதற்குப் பதிலாக வெறுப்பை அவர்களது சிந்தனையிலே விதைக்கக்கூடாது. எதனை ஆராயவேண்டும் என்ற ஆர்வ ஊக்கத்தை உருக்குலைத்து விடக்கூடும். இதனால், தற்போதுள்ள கல்விமுறையை மாற்ற வேண்டும். -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்[2]
  • குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது பயன்படும் செய்திகளை எல்லாம் பள்ளியிலேயே கற்றுக்கொடுக்கலாம் என்ற கட்டாய நிலையை கல்விமுறை கைவிட வேண்டும். வாழ்கை என்பதும் கலைதானே! அக்கலைகளை பள்ளிகளிலே கல்வி மூலமாகப் போதிப்பது என்பது ஒரு கடினமான, சிக்கலான, சிந்தனை ஓட்டத்தைக் குன்ற வைக்கும் ஒரு செயல் என்பதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்[2]

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms