ஒருவன் இருக்கிறான்
ஒருவன் இருக்கிறான் கதை “கு.அழகிரிசாமி சிறுகதைகள்” என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
கு.அழகிரிசாமி அரசுப்பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர்.
மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்.
கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம்.
கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை.
படைப்பின் உயிரை முமுமையாக உணர்ந்திருந்த கு.அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியுள்ளர்.
மலேசியாவில் இருந்தபோத அங்குள்ள படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர்.
இவர் பதிப்பு பணி, நாடகம் என பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர்.
தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு திறனாய்வு நூல்களையும் படைத்தவர்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
“ஒருவன் இருக்கிறான்” கதையின் ஆசிரியர் ………………… ஆவார்.
அ) அழகர்சாமி
ஆ) அழகிரிசாமி
இ) அண்ணாதுரை
ஈ) சுஜாதா
Answer:
ஆ) அழகிரிசாமி
Question 2.
அரசுப் பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் …………………
அ) அழகிரிசாமி
ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயகாந்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) அழகிரிசாமி
Question 3.
…………………வரிசையில் மூத்தவர் அழகிரிசாமி ஆவார்.
அ) வானம்பாடி
ஆ) மணிக்கொடி
இ) கரிசல் எழுத்தாளர்கள்
ஈ) கணையாழியில் எழுதியவர்
Answer:
இ) கரிசல் எழுத்தாளர்கள்
Question 4.
அழகிரிசாமி எந்நாட்டில் படைப்பாளர்களுக்கான படைப்புப் பயிற்சி அளித்தார் …………………
அ) தாய்லாந்து
ஆ) இந்தியா
இ) இலங்கை
ஈ) மலேசியா
Answer:
ஈ) மலேசியா
Question 5.
சரியான கூற்றுகளைத் தேர்க.
i) தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அழகிரிசாமி திறனாய்வு நூல்களைப் படைக்கவில்லை.
ii) கு. அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியவர்.
iii) வீரப்பனும் குப்புசாமியும் ரொம்ப சிநேகம்.
அ) மூன்று கூற்றுகளும் சரியானவை
ஆ) கூற்று (ii), (ii) சரியானவை
இ) கூற்று (iii) மட்டும் சரி
ஈ) மூன்று கூற்றுகளும் தவறானவை.
Answer:
ஆ) கூற்று (i), (iii) சரியானவை
Question 6.
ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ் …………………
அ) கலைமகள்
ஆ) கணையாழி
இ) குமுதம்
ஈ) ஆனந்தவிகடன்
Answer:
அ) கலைமகள்
Question 7.
“ஒருவன் இருக்கிறான்” கதை வெளியான ஆண்டு …………………
அ) 1956
ஆ) 1966
இ) 1976
ஈ) 1979
Answer:
ஆ) 1966
Question 8.
வீரப்பன் குப்புசாமிக்கு கொடுத்துவிட்ட பணம் …………………
அ) ஒரு width=”197″ height=”19″
ஆ) மூன்று width=”197″ height=”19″
இ) நான்கு width=”197″ height=”19″
ஈ) ஐந்து width=”197″ height=”19″
Answer:
ஆ) மூன்று width=”197″ height=”19″
 
 
No comments:
Post a Comment