Wednesday, August 25, 2021

SAT -8th Science - 5. மின்னியல்

 

5. மின்னியல்

 1. தனிமத்தின் மிகச்சிறிய அலகு அணுக்கள் ஆகும். 

2. அணுவின் அடிப்படைத்துகள்கள் புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான். 

3. அணுவின் மையத்தில் உட்கருவில் மையத்தில் காணப்படுவது புரோட்டான்களும் நியூட்ரான்களும் ஆகும்.

4. ஒரு அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்.

5. ஒன்றை ஒன்று ஈர்க்கும் (அ)விலக்கும் பண்பு மின்னூட்டம் எனப்படும். 

6. புரோட்டான்கள் நேர் மின்னூட்டத்தையும், எலக்ட்ரான்கள் எதிர் மின்னூட்டத்தையும் பெற்றிருக்கின்றன.

7. மின்னுாட்டத்தின் அலகு கூலும்.

8. எலக்ட்ரான்களை ஏற்றுக்கொண்ட பொருள் எதிர் மின்னூட்டத்தையும், எலக்ட்ரான்கனை இழக்கும் பொருள் நேர் மின்னூட்டத்தையும் பெறுகிறது. 

9. ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின்துகள்கள் உராய்வு, கடத்துதல் மற்றும் மின்துாண்டல் மூலம் இடமாற்றம் அடைகின்றன.

10. கண்ணாடி தண்டினை பட்டுத்துணியால் தேய்க்கும் போது கண்ணாடித்துண்டு எலக்ட்ரான்களை இழப்பதால் நேர் மின்னுாட்டம் பெறுகின்றன. பட்டுத்துணி எலக்ட்ரான்களை ஏற்பதால் எதிர் மின்னூட்டம் பெறுகிறது.

11. ரப்பர் தண்டினை விலங்கு உரோமம் (அ) கம்பளியால் தேய்க்கும் போது கம்பளியானது எலக்ட்ரான்களை இழப்பதால் நேர் மின்னூட்டம் பெறுகிறது. பிளாஸ்டிக் தண்டு எலக்ட்ரான்கனை ஏற்பதால் எதிர் மின்னூட்டம் பெறுகிறது.

12. மின்துகள்களை தன்வழியே பாய அனுமதிக்கும் பொருட்கள் மின்கடத்திகள் ஆகும். 

13. மின்துகள்களை தன் வழியே பாய அனுமதிக்காத பொருட்கள் மின்காப்பு பொருட்கள் (அ) மின்கடத்தாப்பொருட்கள் எனப்படும்.

14. பொருளொன்றில் மின்துகள்கள் இருப்பதைக் கண்டறியப் பயன்படும் அறிவியல் கருவி நிலைமின்காட்டி ஆகும்.

15. நிலைமின்காட்டியை 1600 ஆம் ஆண்டு வில்லியம் கில்பர்ட் என்பவர் வடிவமைத்தார். 

16. நிலைமின்காட்டி இருவகைப்படும் அவை பந்து நிலைமின்காட்டி தங்க இலை நிலைமின்காட்டி.

17. நிலைமின்காட்டியின் மற்றொருபெயர் வெர்சோரியம்.

18. தங்க இலை நிலைமின்காட்டியை 1787 ஆம் ஆண்டு ஆபிரகாம் பெனட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

19. மேகங்களில் நடைபெறும் மின்னிறக்கத்திற்கு உதாரணம் மின்னல் ஆகும். 

20. உயரமான கட்டடங்களை மின்னல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவும் ஒரு கருவி மின்னல் கடத்தி ஆகும்.

21. மின்னல் கடத்தியில் பயன்படுத்தப்படும் உலோகம் தாமிரம் ஆகும். 

22. மின்மூலம் ஒன்றின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எலக்ட்ரான்கள் பாயும் பாதை மின்சுற்று எனப்படும்.

23. ஈல் என்ற ஒருவகையான விலாங்கு மீன் 650 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உருவாக்கி மின் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

24. LED என்பது Light Emitting Diode. 

25. LED என்பது ஒளி உமிழ் டையோடு.

26. இரும்பின் மீது ஏற்படும் அரிமானம் மற்றும் துருபிடித்தலை தடுக்க அதன் மீது துத்தநாகப்படலம் பூசப்படுகிறது.

27. மின்தடையை தடுக்க மின்விளக்குகளில் டங்ஸ்டன் கம்பியும் பொருள்களை வெப்பப்படுத்தும் வீட்டு உபயோகப்பொருட்களில் நிக்ரோம் கம்பியும் பயன்படுகிறது. 

28. ஓரின மின்துகள்கள் ஒன்றை ஒன்று விலக்கும். 

29. வேரின மின்துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும். 

30. மின்உருகி  துண்டுக்கம்பி தயாரிக்க பயன்படும் உலோகக்கலவை வெள்ளீயம்

மற்றும் காரீயம் கலந்த உலோகக்கலவை.

31. மின்னாற்றலை சேமித்துவைக்கும் சாதனம் மின்கலம் ஆகும். 

32. மின்கடத்தியில் பாயும் எதிர்மின்துகளின் ஓட்டம் மின்னோட்டம் எனப்படும். 

33. அதிக மின்தடையும் குறைந்த உருகுநிலையும் கொண்ட கம்பி மின்உருகி

34. மின்னழுத்தத்தின் அலகு வோல்ட்.

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms