Monday, August 2, 2021

9th Tamil- தமிழோவியம்


    பாடநூல் வினாக்கள்

    பலவுள் தெரிக

    வினா 1.

    காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!

    காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! ……………

    இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

    அ) முரண், எதுகை, இரட்டைத் தொடை.

    ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை

    இ) எதுகை, மோனை, இயைபு.

    ஈ) மோனை, முரண், அந்தாதி.

    விடை:

    இ) எதுகை, மோனை, இயைபு.

    குறுவினா

    வினா 1.

    தமிழோவியம் கவிதையில் நும்மை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

    விடை:

    “மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள்

    மட்டுமே போதுமே ஓதி நட”

    மானிடத்தின் மேன்மையைச் சாதனை செய்ய குறள் மட்டுமே போதும் அதைப் படித்து நடக்க வேண்டும்.

    வினா 2.

    “அகமாய் புறமாய் இலக்கியங்கள் – அவை

    அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்”

    இலக்கியங்களின் பாடு பொருளாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?

    விடை:

    பழந்தமிழ் இலக்கியங்கள், அகம் புறம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வரிகள், தமிழர்களின் இல்லற வாழ்வைச் சொல்லும் அக இலக்கியங்களையும் போர் வாழ்வைச் சொல்லும் புற இலக்கியங்களையும் உணர்த்துகின்றன.

    சிறுவினா

    வினா 1.

    காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

    விடை:

    • தமிழ் மொழி தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடையது.
    • தமிழ் மொழி ஏனைய திராவிட மொழிகளைவிட தனக்கெனத் தனித்த இலக்கண வளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும் மொழியாகும்.
    • பிற மொழித் தாக்கம் தமிழில் குறைவு.
    • ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளம் பெற்ற மொழி.
    • இந்தியாவில் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழில் அமைந்துள்ளன.
    • எண்ணற்ற வேர்ச்சொற்களைக் கொண்டு புதுப்புது சொற்களை உருவாக்கி அறிவியல்,
    • சமூகம், பண்பாட்டுத் துறைகளில் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது தமிழ்.

    வினா 2.

    புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் – உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

    விடை:

    முன்னுரை :

    தமிழ்மொழி, இலக்கண இலக்கிய வளம் பெற்று செழித்தோங்கி இருக்கிறது. தமிழானது தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் முதலிய அறிவுக்கருவூலம் நிறைந்துள்ள தொன்மை சான்ற மொழியாகும். தமிழ்மொழியின் சீர் இளமைத்திறம் வியந்து போற்ற வேண்டும். சங்க காலம் முதல் இக்காலம் வரை தமிழ் புதுக்கோலம் பெற்றுப் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. அதன் வளர்ச்சிக்கான பங்கினை இக்கட்டுரையில் காண்போம்.

    அறிவியல் தமிழ் :

    தமிழ், தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழியாக இருந்து பிற துறைகளோடு இணைந்து வாழும் மொழியாகக் கருதப்படுகிறது. “தமிழன் அறிவியல் முன்னோடி” என்று கொண்டல் சு.மகாதேவன் நிலை நாட்டுகிறார். ந. சுப்புரெட்டியார், ஜி.ஆர் தாமோதரன், எழுத்தாளர் சுஜாதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். எதிர்வரும் காலங்களில் என்பங்களிப்பை இதைவிடச் சிறப்பாகச் செய்வேன்.

    ஊடகத்துறை :

    நம் நாட்டில் பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறையோடு பத்திரிகைத்துறையும் வளர்ந்து வந்திருக்கிறது. இதழியல் தமிழறிஞர்கள் பாரதியார், திரு.வி.க, சி.பா.ஆதித்தனார் வழி என் பங்கையும் அளிப்பேன். வானொலி, தொலைக்காட்சி, இணைய வலைத் தொலைபேசி ஆகியவற்றிற்கான இணையத் தமிழ் அகராதி கண்டுபிடிப்புக்கு முயற்சி செய்வேன்.

    கணிப்பொறி :

    இன்று வளர்ந்து நிற்கும் துறைகளுள் ஒன்று கணினித்துறை. ஆனால் இதில் இன்று வரை ஆங்கிலமே ஆட்சிசெய்து வருகிறது. மின்னணு அஞ்சல், பல்நோக்கு ஊடகம், மக்களை ஆட்சி செய்கிறது. வளர்ந்து வந்துள்ள உயிரோட்ட (Animation) வரைபடங்கள், ஒளிக்காட்சிப் படங்கள் (Vidio Pictures), வரைகலை (Graphies), எழுத்து (Text), ஒலி (Sound) ஆகியவற்றை எடுத்துச் சொல்ல தமிழ்ச் சொற்களைப் புதுப்பொலிவுடன் உருவாக்குவேன்.

    நிறைவுரை :

    “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்; தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” எனும் பாரதியாரின் எண்ணங்களுக்குப் புதுமை வடிவம் தருவேன்.

    கற்பவை கற்றபின்

    வினா1

    பிறமொழி கலப்பின்றித் தனித்தமிழில் இரண்டு மணித்துளிகள் வகுப்பறையில் பேசுக. பிறமொழிக் கலப்பின்றித் தனித்தமிழில் பேசுதல்:

    விடை:

    அவையோர் அனைவருக்கும் வணக்கம்! என் உரையைக் கேட்க ஆவலுடன் அமர்ந்திருக்கும் எங்கள் தமிழ் ஐயா! அவர்களே! என் உடன் பயிலும் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே உங்கள் முன் தனித்தமிழில் உரையாடுவதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

    நான் உரையாற்ற எடுத்துக்கொண்ட தலைப்பே, “தனித்தமிழ்” என்பதுதான்.

    நாம், நம் அன்றாட வாழ்வில் தமிழ்மொழியைச் சிறிது சிறிதாக மறந்து கொண்டிருக்கிறோம். பிறமொழிச்சொற்களைத் தமிழ்மொழி போலவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உண்பது, பள்ளிக்கு வருவது, கடைக்குச் செல்வது என அனைத்து நிலைகளிலும் நம்மை அறியாமலே பிறமொழிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். “மெல்லத் தமிழ் இனி சாகும்” என்று கவிஞர் வருந்தியது போலவே எனக்கும் வருத்தமாக இருக்கிறது.

    அன்பு நண்பர்களே! அனைத்துத் துறை சார்ந்த சொற்கள், கலைச்சொற்கள் மட்டும் அல்ல அனைத்துத் தரவுகளும் நம் அமுதத் தமிழில் வலம்வந்து கொண்டிருக்கிறது.

    கணினியைப் பயன்படுத்தும் நாம்……. எப்படித் தமிழைப் பயன்படுத்துவது என தயங்காதீர். அனைத்து கணினி சார்ந்த ஆங்கில வார்த்தைக்கும் செயலி, விரலி, சுட்டி, உலவி …… என தமிழில் சொற்கள் உண்டு.

    எனவே, தனித்தமிழ் பயன்படுத்துவோம்! நம் கன்னித்தமிழை வளர்ப்போம்!!

     வினா.2

    கவிதையைத் தொடர்க
    அன்னை சொன்ன மொழி
    ஆதியில் பிறந்த மொழி
    இணையத்தில் இயங்கும் மொழி
    ஈடிலாத் தொன்மை மொழி
    உலகம் போற்றும் மொழி
    ஊர்கூடி வியக்கும் மொழி

    ...............................................
    ...............................................
    விடை: எங்கும் நிறைந்த மொழி
    ஏற்நடை பயின்ற மொழி
    ஒற்றுமை வளார்க்கும் மொழி
    ஓங்கி வளர்ந்த மொழி

     

    No comments:

    Post a Comment

    கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்

     கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்