Friday, June 19, 2020

NTSE EXAM தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு

படிவம் வழங்குதல்: (Issue of Application:)
அக்டோபர் மாதத்தில் பள்ளிக் கல்வி துறையால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக், சி பி எஸ் சி , கேந்திரிய வித்யாலயா மற்றும் அரசுத் தேர்வுத் துறையின் அனைத்து பிராந்திய அலுவலங்களுக்கும் இந்தத் தேர்விற்கான படிவம் வழங்கப்படும்.


யார் எழுதலாம்: (Eligibility of Candidates)
தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 60% அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதலாம். இதற்கு வருமான வரி உச்சவரம்பு ஏதும் இல்லை.




விண்ணப்பித்தல்:(Method of Applying)
தலைமை ஆசிரியர்கள் மூலமாக விண்ணப்பிக்க இயலும்.

தேர்வு நடைபெறும் காலம்:
இது இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். முதல் நிலை தேர்வு தமிழகத்தில் தேர்வுத் துறையால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத முதல் சனிக்கிழமை நடைபெறும்.
இரண்டாவது நிலை தேர்வு NCERT ஆல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சென்னையில் மட்டுமே நடைபெறும்.

RELATED POSTS
NMMS தேர்விற்கான STUDY MATERIALS        click here
NMMS தேர்வு ஓர் அறிமுகம்  click here

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms