Pages

Monday, September 12, 2022

மெய்க்கீர்த்தி

மெய்க்கீர்த்தி

கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி பாடமாக உள்ளது.

இம்மெய்க்கீர்த்திப் பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர உணர்த்துவதாக உள்ளது. இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு.

மெய்க்கீர்த்திகள் கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள்.

இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.

அதில் ஒன்று 91 அடிகளைக் கொண்டது.

அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன .

இப்பாடப் பகுதிக்கான மூலம் தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து பெறப்பட்டது.

முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன .

 

I. பலவுள் தெரிக

‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் –

  1. மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
  2. மிகுந்த செல்வம் உடையவர்
  3. பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
  4. நெறியோடு நின்று காவல் காப்பவர்

விடை : நெறியோடு நின்று காவல் காப்பவர்

 


கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

வருபுனல் – வினைத்தொகை
இளமான் – பண்புத்தொகை
மாமலர் – உரிச்சொல் தொடர்
எழு கழனி – வினைத்தொகை
நெடுவரை – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்.

கடிந்து கடி த்(ந்) த் உ

கடி – பகுதி
த்(ந்) – சந்தி (ந்) ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

Question 1.
மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாய்த் திகழும் சங்க இலக்கியப்பாடல்கள்……………………….
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) குறுந்தொகை
ஈ) அகநானூறு
Answer:
ஆ) பதிற்றுப்பத்து

Question 2.
பல்லவர் கால கல்வெட்டும், பாண்டியர் கால செப்பேடும் சோழர் காலத்தில் எனப் ………………………பெயர் பெற்றது.
அ) மெய்க்கீர்த்தி
ஆ) மெய்யுரை
இ) நூல்
ஈ) செப்பம்
Answer:
அ) மெய்க்கீர்த்தி

Question 3.
………………………இந்திரன் முதலாகத் திசைபாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றதுபோல் ஆட்சி செய்தவன்.
அ) இளஞ்சேரலாதன்
ஆ) இரண்டாம் இராசராசன்
இ) இராஜேந்திர சோழன்
ஈ) முதலாம் இராசராசன்
Answer:
ஆ) இரண்டாம் இராசராசன்

Question 4.
சோழநாட்டில் பிறழ்ந்தொழுகுவது………………………
அ) இளமான்கள்
ஆ) யானைகள்
இ) மக்கள்
ஈ) கயற்குலம்
Answer:
ஈ) கயற்குலம்

Question 5.
‘காவுகளே கொடியவாயின’ – இதில் ‘காவு’ என்பதன் பொருள்………………………
அ) காடுகள்
ஆ) மலைக்குகை
இ) கடல்
ஈ) யானைகள்
Answer:
அ) காடுகள்

Question 6.
‘இயற்புலவரே பொருள் வைப்பார்’ – எதில்?
அ) இல்லத்தில்
ஆ) மன்றத்தில்
இ) செய்யுளில்
ஈ) சான்றோர் அவையில்
Answer:
இ) செய்யுளில்

Question 7.
‘முகம் பெற்ற பனுவலென்னவும்’ – பனுவல் என்பதன் பொருள்………………………
அ) பொருள்
ஆ) முன்னுரை
இ) நூல்
ஈ) கோல்
Answer:
இ) நூல்

Question 8.
கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்………………………
அ) இரண்டாம் இராசராசன்
ஆ) குலோத்துங்கன்
இ) முதலாம் இராசராசன்
ஈ) விக்கிரம சோழன்
Answer:
அ) இரண்டாம் இராசராசன்

Question 9.
யாருடைய காலந்தொட்டு மெய்க்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டது?
அ) பல்ல வர்
ஆ) பாண்டியர்
இ) முதலாம் இராசராசன்
ஈ) இராஜேந்திர சோழன்
Answer:
இ) முதலாம் இராசராசன்

Question 10.
இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்தியின் வரிகள்………………………
அ) 81
ஆ) 91
இ) 101
ஈ) 112)
Answer:
ஆ) 91

Question 11.
அழியாத கல் இலக்கியம் எனப் போற்றப்படுவது………………………
அ) செப்பேடு
ஆ) சிற்பங்கள்
இ) ஓவியம்
ஈ) மெய்க்கீர்த்தி
Answer:
ஈ) மெய்க்கீர்த்தி

Question 12.
சோழநாட்டில் சிறைப்படுவன………………………
அ) மா
ஆ) வண்டுகள்
இ) வருபுனல்
ஈ) காவுகள்
Answer:
இ) வருபுனல்

Question 13.
திசாபாலர் ………………………ஆவார்
அ) அறுவர்
ஆ) எழுவர்
இ) எண்மர்
ஈ) பதின்மர்
Answer:
இ) எண்மர்

Question 14.
பொருத்துக.
1. பிணிப்பு – அ) நீர்
2. புனல் – ஆ) கட்டுதல்
3. கழனி – இ) இருள்
4. மை – ஈ) வயல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 15.
பொருத்துக.
1. முகம் – அ) மலை
2. வரை – ஆ) செவிலித்தாய்
3. கைத்தாய் – இ) நூல்
4. பனுவல் – ஈ) முன்னுரை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.
பொருத்துக.
1. யானை – அ) புலம்புகின்றன
2. சிலம்புகள் – ஆ) பிணிக்கப்படுவன
3. ஓடைகள் – இ) வடுப்படுகின்றன
4. மாங்காய்கள் – ஈ) கலக்கமடைகின்றன
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 17.
பொருத்துக.
1. மலர்கள் – அ) பறிக்கப்படுகின்றன
2. காடுகள் – ஆ) தேன் உண்ணுகின்றன
3. வண்டுகள் – இ) கொடியன
4. மலை மூங்கில்- ஈ) உள்ளீடு இன்றி வெறுமை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Question 18.
பொருத்துக.
1. நெற்கதிர்கள் – அ) இருள் சூழ்ந்திருக்கின்றன
2. மலைகள் – ஆ) மருள்கின்றன
3. மான்களின் கண்கள் – இ) பிறழ்ந்து செல்கின்றன
4. குளத்து மீன்கள் – ஈ) போராக எழுகின்றன
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 19.
பொருத்துக.
1. செவிலித்தாய் – அ) பொருள் பொதிந்து கிடக்கின்றது.
2. புலவர் பாட்டு – ஆ) தெருவில் ஆடிப்பாடுபவர்.
3. இசைப்பாணர் – இ) பிறழ்ந்து செல்கின்றன.
4. குளத்து மீன்கள் – ஈ) சினங்காட்டுவார்.
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 20.
சொற்றொடரை முறைப்படுத்துக.
i) கல்தச்சர்களால்
ii) புலவர்களால் எழுதப்பட்டு
iii) மெய்க்கீர்த்திகள்
iv) கல்லில் பொறிக்கப்பட்டவை
அ) (ii)-(ii)-(i)-(iv)
ஆ) (ii)-(i)-(i)-(iv)
இ) (i)-(iii)-(iv)-(ii)
ஈ) (iv)-(iii)-(i)-(ii)
Answer:
அ) (iii)-(ii)-(i)-(iv)

Question 21.
பொருந்தாததைக் கண்டறிக.
அ) யானைகள் பிணிக்கப்படும் – மக்கள் பிணிக்கப்படுவதில்லை
ஆ) சிலம்புகள் புலம்பும் – மக்கள் புலம்புவதில்லை
இ) ஓடைகள் கலக்கமடையும் – மக்கள் கலக்கமடைவதில்லை
ஈ) ஓடைகள் அடைக்கப்படுவதில்லை – மக்கள் அடைக்கப்படுகின்றனர்
Answer:
ஈ) ஓடைகள் அடைக்கப்படுவதில்லை – மக்கள் அடைக்கப்படுகின்றனர்

Question 22.
செப்பமான வடிவம் பெற்றது, கல்லிலக்கியமாய் அமைந்தது………………………
அ) கல்வெட்டு
ஆ) மெய்க்கீர்த்தி
இ) செப்பேடு
ஈ) இலக்கியம்
Answer:
ஆ) மெய்க்கீர்த்தி

Question 23.
தந்தையில்லாதவருக்குத் தந்தையாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 24.
தாயில்லாதவருக்குத் தாயாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 25.
மகனில்லாதவருக்கு மகனாக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 26.
உலக உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 27.
விழி பெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ்பெற்ற நூ லாகவும் திகழ்பவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக் கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

Question 28.
புகழ் அனைத்திற்கும் தலைவனானவன்………………………
அ) இராசராச சோழன்
ஆ) ஒட்டக் கூத்தர்
இ) பல்ல வர்
ஈ) சேரர்
Answer:
அ) இராசராச சோழன்

No comments:

Post a Comment