Pages

Monday, September 12, 2022

ஏர் புதிதா?

ஏர் புதிதா? 

I. பலவுள் தெரிக

1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

  1. உழவு, மண், ஏர், மாடு
  2. மண், மாடு, ஏர், உழவு
  3. உழவு, ஏர், மண், மாடு
  4. ஏர், உழவு, மாடு, மண்

விடை : உழவு, ஏர், மண், மாடு

‘ஏர் புதிதா?’ எனும் கவிதை கு.ப.ரா. படைப்புகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

1902இல் கும்பகோணத்தில் பிறந்த கு.ப.ராஜகோபாலன் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

இவரின் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புகள் அகலிகை, ஆத்ம சிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன்ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.

 

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சங்கத்தமிழரின் திணை வாழ்வு எதை அடிப்படையாகக் கொண்டது?
அ) நெசவை
ஆ) போரினை
இ) வேளாண்மையை
ஈ) கால்நடையை
Answer:
இ) வேளாண்மையை

Question 2.
தமிழரின் தலையான தொழிலாகவும், பண்பாடாகவும் திகழ்வது ………………………….
அ) கல்வி
ஆ) உழவு
இ) நெசவு
ஈ) போர்
Answer:
ஆ) உழவு

Question 3.
தமிழர் பண்பாட்டின் மகுடமாகத் திகழ்வது ………………………….
அ) நாகரிகம்
ஆ) கலை
இ) உழுதல்
ஈ) பொன் ஏர் பூட்டுதல்
Answer:
ஈ) பொன் ஏர் பூட்டுதல்

Question 4.
பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் ………………………….
அ) சித்திரை
ஆ) ஆனி
இ) ஆடி
ஈ) தை
Answer:
அ) சித்திரை

Question 5.
‘ஏர் புதிதா?’ என்னும் கவிதை இடம் பெற்ற நூல் ………………………….
அ) அகலிகை
ஆ) ஆத்மசிந்தனை
இ) கு.ப.ரா. படைப்புகள்
ஈ) ஏர்முனை
Answer:
இ)கு.ப.ரா.படைப்புகள்

Question 6.
கு.ப.ரா. பிறந்த ஊர் ………………………….
அ) தஞ்சை
ஆ) மதுரை
இ) கும்பகோணம்
ஈ) நெல்லை
Answer:
இ) கும்பகோணம்

Question 7.
கு.ப.ரா. பிறந்த ஆண்டு ………………………….
அ) 1902
ஆ) 1912
இ) 1915
ஈ) 1922
Answer:
அ) 1902

Question 8.
கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று. ………………………….
அ) தமிழ் ஊழியன்
ஆ) தினமணி
இ) இந்தியா
ஈ) கிராம ஊழியன்
Answer:
ஈ) கிராம ஊழியன்

Question 9.
‘கடுகி செல்’ – இதில் ‘கடுகி’ என்பதன் பொருள் ………………………….
அ) செல்லுதல்
ஆ) மெதுவாக
இ) விரைந்து
ஈ) இயல்பாக
Answer:
இ) விரைந்து

Question 10.
நிலம் சிலிர்க்கும், நாற்று ………………………….
அ) வளரும்
ஆ) வளையும்
இ) நிமிரும்
ஈ) நெகிழும்
Answer:
இ) நிமிரும்

Question 11.
ஊக்கம் புதிது, உரம் புதிது – இதில் உரம் என்ற சொல் குறிப்பது ………………………….
அ) வலிமை
ஆ) பயிர் உரம்
இ) சத்து
ஈ) வித்து
Answer:
அ) வலிமை

Question 12.
உலகத்தார்க்கு அச்சாணி என்போர் ………………………….
அ) தொழுவோர்
ஆ) கற்போர்
இ) உழுவோர்
ஈ) போரிடுவோர்
Answer:
இ) உழுவோர்

Question 13.
பொருத்துக.
1. முதல் மழை – அ) பதமாகியது
2. மேல்மண் – ஆ) முளைத்தது
3. வெள்ளி – இ) தொழு
4. பொன்னேர் – ஈ) விழுந்தது
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 14.
‘வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா’ என்று பாடியவர் ………………………….
அ) மா.பொ .சி
ஆ) கு.ப.ராஜகோபாலன்
இ) சுரதா
ஈ) பாரதிதாசன்
Answer:
ஆ) கு.ப.ராஜகோபாலன்

Question 15.
தவறான ஒன்றினைக் கண்டறிக.
அ) மண் புரளும்
ஆ) மேற்கு வெளுக்கும்
இ) மழை பொழியும்
ஈ) எல்லைத் தெய்வம் காக்கும்
Answer:
ஆ) மேற்கு வெளுக்கும்]

Question 16.
‘பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில்
நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை’ என்று பாடியவர்?
அ) மா.பொ.சி
ஆ) கு.ப.ராஜகோபாலன்
இ) சுரதா
ஈ) பாரதிதாசன்
Answer:
ஆ) கு.ப.ராஜகோபாலன்

No comments:

Post a Comment