அலகு -1
உயிரிகளின் இனப்பெருக்கம்
சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன.______.
அ) அர்ரீனோடோக்கி ஆ) தெலிடோக்கி இ) ஆம்ஃபிடோக்கி ஈ) ‘அ’ மற்றும் ‘இ’ இரண்டும்
விடை : அ) ஆர்ரீனோடோக்கி
2. இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள்
அ) முட்டையிடுபவை ஆ) தாயுள் முட்டை பொரித்துக்குட்டி ஈனுபவை இ) குட்டி ஈனுபவை ஈ) ‘அ’ மற்றும் ‘ஆ’ இரண்டும்
விடை : இ) குட்டி ஈனுபவை
3. பாக்டீரியாவில் இனப்பெருக்கம் கீழ்க்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது.
அ) கேமிட் உருவாக்கம் ஆ) என்டோஸ்போர் உருவாக்கம் இ) இணைதல் ஈ) சூஸ்போர் உருவாக்கம்
விடை : இ) இணைதல்
4. எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும்
அ) பாலிலி இனப்பெருக்கம் ஆ) கன்னி இனப்பெருக்கம் இ) பாலினப்பெருக்கம் ஈ) ‘அ’ மற்றும் ‘ஆ’ இரண்டும்
விடை : இ) பாலினப்பெருக்கம்
5. உறுதிக்கூற்று மற்றும் காரண வினாக்கள் :
கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக்கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா) சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
அ) ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘உ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ)‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘உ’ வின் சரியான விளக்கம் இல்லை.
இ) ‘உ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.
ஈ) ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை
(i) உறுதிக்கூற்று : தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை
காரணம் : ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
விடை : அ) ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘உ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
(ii) உறுதிக்கூற்று : பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும். காரணம் : பாலிலா இனப்பெருக்கத்தில் மறைமுகப்பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.
விடை : அ) ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘உ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
(iii) உறுதிக்கூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
காரணம் : அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.
விடை : இ) ‘உ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.
6. எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?
* அமீபா பிளவுறுதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
* பிளவுறுதல் என்பது செல் பிரிதல்.
7. பெண் இனச்செல் நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அது நிகழும் ஒரு பறவையின் பெயரையும் குறிப்பிடுக.
* கன்னி இனப்பெருக்கம் என்பது அந்நிகழ்வின் பெயர். * வான்கோழியில் கன்னி இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
8. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.
* முட்டையானது கருவுறாமல் ஒரு உயிரியாக வளர்வது கன்னி இனப்பெருக்கம் எனப்படும்.
* (எ.கா) ரோட்டிபர், தேனீக்கள் மற்றும் வான்கோழி.
9. பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப் பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?
* பாலிலி இனப்பெருக்கத்தை விட பாலினப்பெருக்கமே மேம்பட்டது.
* பாலிலி இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் இருக்காது.
* பாலினப் பெருக்கத்தில் வேறுபாடுகள் காணப்படுகிறது.
10. இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம் செய்யும் ஒரு செல் உயிரிகள் அழிவற்றவை. நியாயப்படுத்துக.
* அமீபா ஒரு ஓர்செல் உயிரியாகும். இது அழிவற்றவை எனப்படும்.
* ஒரு முதிர்ந்த அமீபா மைட்டாசிஸ் மூலம் இரண்டு இளம் அமீபாவாக உருவாகிறது.
11. பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’(clone) என்று அழைக்கப்படுகிறது?
* பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் பெற்றோர்களின் பண்புகளையே கொண்டிருக்கும்.
* இதையே பிரதி எனவும் சொல்லலாம்.
* பிரதி என்பது பெற்றோரின் சாயலை கொண்ட சேய்களாகும்.
12. முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டி ஈனும் விலங்குகளின் சேய்களை விடப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு
* குட்டி ஈனும் உயிரிகளின் இளம் உயிர் தாயின் கருப்பையில் வளர்கிறது
* முட்டையிடும் உயிரிகள் முட்டையை வெளியே இடுகிறது
* அந்த முட்டையின் வளர்ச்சியை, வெளிப்புறச் சுற்று சூழலை கட்டுப்படுத்துகிறது
* எனவே முட்டையிடு விலங்குகளின் சேய்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
13. காரணங்கள் கூறுக.
அ) தேனீக்கள் போன்ற உயிரிகள் கன்னி இனப்பெருக்க விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஆ) ஆண்தேனீக்களில் 16 குரோமோசோம்களும் பெண் தேனீக்களில் 32 குரோமோசோம்களும் காணப்படுகின்றன.
அ) காரணம் : இராணிதேனீ முட்டையிடும் போது சில முட்டைகள் கருவுறாமல் இடப்படுகிறது. அது ஆண் தேனீயாக உருவாகிறது.
ஆ)ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உருவாகுவதால் அது 16 குரோமோசோம்கள் பெற்றிருக்கும்.
பெண் தேனீக்கள் கருவுறுதல் மூலம் உருவாகுவதால் அதில் விந்தின் பு6 குரோமோசோமும், அண்டத்தின் 16 குரோமோசோமும் இணைந்து 32 குரோமோசோம்கள் காணப்படுகின்றன.
இரு சமப்பிளவு முறை அமீபாவில் | பல பிளவு முறை பிளாஸ்மோடியத்தில் |
1. இது ஒரு எளிய முறை | பிளாஸ்மோடியத்தில் சைஷாண்ட் மற்றும் ஊசைட் நிலையில் பல பிளவுமுறை நடைபெறுகிறது. |
2. சுருங்கும் நுண்குமிழ் செயலிழந்து மறைந்து விடும். | சைஷான்ட் நிலையில் பலபிளவு முறை நடை பெறுதலுக்கு சைஷோகனி என்று பெயர். |
3 .உட்கருமணி மறைந்துவிடும். | இதன் சேய் உயிரிகள் மீரோசோயிட்டுகள் ஆகும். |
4 உட்கருவானது மறைமுகப் பிரிவு முறையில் பிளவுபடும். | ஊசைட் நிலையில் நடைபெறும் பல பிளவு முறை ஸ்போரோகனி என்றும் சேய் உயிரிகள் ஸ்போரோசோயிட்டுகள் ஆகும். |
5. செல்லின் நடுவில் சுருக்கம் ஏற்பட்டு சைட்டோபிளாசம் பிரியும். |
பல்லி இழப்பு மீட்டல் | பிளனேரியாவில் இழப்பு மீட்டல் |
1. இது மீண்டும் உருவாக்குதல் முறையாகும். | 1. இது சீராக்கல் முறையாகும். |
2. வெட்டுண்ட வாலை மீண்டும் பெறுதல். | 2. உடலில் சேதமுற்ற சில வகையான திசுக்கள் மட்டும் சரி செய்யப்படுகின்றன. |
15. இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?
பூச்சி – லார்வா
மனிதகுரங்கு – குழந்தை
பூனை – பூனைக்குட்டி
இனப்பெருக்க நிலை :
* ஒரு உயிரியானது இனப்பெருக்கம் செய்து வழித்தோன்றல்களை உருவாக்கும் செயல்களைச் செய்யும் காலம் இனப்பெருக்க நிலை ஆகும்.
* ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் பருவகால இனச்சேர்க்கையாளர்கள் எனப்படும்.
* பால் முதிர்ச்சிக்காலம் முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள் எனப்படும். (எ.கா.) முயல், கோழிகள்.
16. ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையோன வேறுபாடுகள் யாவை?
ஆண் மற்றும் பெண் முந்தைய மூலஅணு உட்கரு, கருவுறுதலுக்கு பின் இணைதல் | ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைவதை கருவுறுதல் |
கருவின் ஈறிணை நிலையை உறுதி செய்கிறது. | இது கருவுறுதலை உறுதிப்படுத்துகிறது. |
No comments:
Post a Comment