இரட்டுற மொழிதல்
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
வினா1.
‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
விடை:
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
குறுவினா
வினா1.
தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
விடை:
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.
எ.கா: சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்.
– இத்தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.
சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.
சீனிவாசகனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறார்.
ச சிறுவினா
வினா1.
தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
பாடல் அடிகள் | தமிழ் | கடல் |
முத்தமிழ் துய்ப்பதால் | இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழாய் வளர்ந்தது. | முத்தினை அமிழ்ந்து தருகிறது |
முச்சங்கம் கண்டதால் | முதல்,இடை கடை ஆகிய முச்சங்களால் வளார்க்கப்பட்டது. | வெண்டங்கு, சலஞ்சலம்,பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது. |
மெத்த வணிகலமும் மேவதால் (மெத்த அணிகலன்) | ஐம்பெருங்காப்பியங்கள் அணிகலனாய்ப் பெற்றது. | மிகுதியான வணிகக் கப்பல்கள் வந்து சென்றது. |
நித்தம் அணை கிடந்தே சங்கத்தவர் காக்க | சங்கப்பலகையில் அமர்ந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தனர் | தனலையால் சங்கினைத் தடுத்து நிருத்திக் காத்தது |
No comments:
Post a Comment