Pages

Wednesday, September 14, 2022

திராவிட மொழிக்குடும்பம்

 திராவிட மொழிக்குடும்பம்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. திராவிட மொழிகளுள் ___________ தமிழ்.

விடை : மூத்த மொழி

2. தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதன் கண்டுபிடித்த கருவி ___________

விடை : மொழி

3. திராவிடம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் ___________ .

விடை : குமரிலபட்டர்

4. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ___________ க்கும் மேற்பட்டது.

விடை : 1300

5. வினைச்சொற்கள் காலத்தை மட்டுமே காட்டும் மொழி ___________

விடை : ஆங்கிலம்

6. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் ___________

விடை : கால்டுவெல்

7. திராவிட மொழிகள் மொத்தம் ________ எனக் கூறுவர்

விடை : 28

8. தமிழ் மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் ___________  கருதப்படுகிறது.

விடை : தாய் மொழியாகக்

9. தமிழ் மொழியில் பழமையான இலக்கண நூல் ___________

விடை : தொல்காப்பியம்

10. மலையாள மொழியில் பழமையான இலக்கண நூல் ___________

விடை : லீலாதிலகம்

II. பொருத்துக

1. தமிழ் அ. லீலா திலகம்
2. கன்னடம் ஆ. ஆந்திர பாஷா பூஷனம்
3. தெலுங்கு இ. தொல்காப்பியம்
4. மலையாளம் ஈ. கவிராஜ மார்க்கம்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

 

No comments:

Post a Comment