Pages

Wednesday, September 21, 2022

9th TTSE - Tamil Part-1

 ஒன்பதாம் வகுப்பு-100 முக்கிய வினாக்கள்

PART-1

1.. தமிழியன் என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர்

அ. கால்டுவேல்

ஆ. மாக்ஸ்முல்லர்

இ. ஸ்டென்கனோ

ஈ. ஹோக்கன்

2. இந்திய நாடு மொழிகளின் காட்சி சாலை எனக் கூறியவர்

அ. கால்டுவெல்

ஆ. குமரிலப்பட்டர்

இ. அகத்தியலிங்கம்

ஈ. பரிதிமாற் கலைஞர்

 

3. திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர்

அ. கால்டுவெல்

ஆ. குமரிலப்பட்டர் 

இ. அகத்தியலிங்கம்

ஈ. பரிதிமாற் கலைஞ

 

4. காலம் பிறக்கும் பிறந்தது தமிழே! காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! இவ்வடியில் பயின்று வரும் அடிகள்

அ. முரண், எதுகை, இரட்டைத் தொடை,

ஆ. இயைபு, அளபெடை, செந்தொடை

இ. எதுகை, மோனை, அந்தாதி

ஈ. எதுகை, மோனை, இயைபு

 

5.தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள்

அ. இலங்கை, சிங்கப்பூர்

ஆ. அமெரிக்கா, கனடா

இ. பிரான்ஸ், இங்கிலாந்து

ஈ. நார்வே, சுவீடன்

 

6." யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் காணோம்” என்று பாடியவர்

அ. பாரதிதாசன்

ஆ. பாரதியார்

இ. நாமக்கல் கவிஞர்

ஈ. கவிமணி


7. 2004 ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற வணக்கம் வள்ளுவ நூலின் ஆசிரியர்

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ. மு. வரதராசன்

ஈ. தமிழன்பன்

8.உலக தாய்மொழி நாள்

அ. ஜனவரி 21

ஆ. பிப்ரவரி 11

இ. பிப்ரவரி 21

ஈ. மார்ச் 21

 

9.. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறும் நூல்

அ. திருக்குறள்

ஆ. மனோன்மணியம்

இ. பிங்கல் நிகண்டு

ஈ. தமிழ்விடு தூது

 

10. தமிழ்விடு தூது... இலக்கியத்தை சார்ந்தது ..

அ. தொடர்நிலை செய்யுள்

ஆ. புதுக்கவிதை

இ.96 வகை சிற்றிலக்கியம்

ஈ. தனிப்பாடல்

 

11.அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி அடிக்கோடிட்ட சொற்களுக்கு இலக்கண குறிப்பு

அ. வேற்றுமைத் தொகை

ஆ. ஈருகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

இ. பண்புத் தொகை

ஈ. வினைத்தொகை

 

12. தமிழ்விடு தூது ஆசிரியர்

அ. பலபட்டடைச் சொக்கநாதர்

ஆ. உ. வே. சா

இ. சத்திமுத்துப் புலவர்

ஈ. . எவருமில்லை

 

13. தமிழ்விடு தூது நூலைப் புதுபித்தவர்

அ. பெருஞ்சேரல் இரும்பொறை

ஆ. உ. வே. சா

இ. அடியார்க்கு நல்லார்

ஈ. ஆறுமுக நாவலர்

 

14. மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்

அ. தமிழ்விடு தூது

ஆ. தமிழோவியம்

இ. திருக்குற்றால குறவஞ்சி

ஈ. முக்கூடற்பள்ளு

 

15.தூது இலக்கியம் பாடப்படும் வகை

அ. சிந்தியல் வெண்பா

ஆ. நேரிசை வெண்பா

இ. கலிவெண்பா

ஈ. இன்னிசை வெண்பா


16. பாவினங்கள் எத்தனை வகைப்படும்

அ. 4

ஆ. 3

இ.8

ஈ 12

 

17. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் ஆசிரியர்

அ. அகத்தியலிங்கம்

ஆ. கால்டுவெல்

இ. பரிதிமாற் கலைஞர்

ஈ. இவற்றில் எதுவுமில்லை

 

18. நான் வந்தேன்" இதில் வரும் பயனிலை 66

அ. பெயர் பயனிலை

ஆ. வினைப் பயனிலை

இ. உரிப் பயனிலை

ஈ. வினா பயனிலை

 

19. அவன் திருந்தினான்” எவ்வகை தொடர் ““

அ. செவினைத் தொடர்

ஆ. வினாத் தொடர்

இ. தன்வினை தொடர்

ஈ.பிறவினைத் தொடர்

 

20. சொன்னவள் கலா” இதில் வரும் பயனிலை “

அ. வினைப் பயனிலை

ஆ. வினாப் பயனிலை

இ. இடைப் பயனிலை

ஈ. பெயர் பயனிலை

 

21. ஓரீஇ என்பதன் இலக்கண குறிப்பு

அ. இன்னிசை அளபடை

ஆ. இலக்கணப் போலி

இ. சொல்லிசை அளபடை

ஈ. ஒரு பொருட் பன்மொழி

 

22. செங்கோல் என்பதன் இலக்கண குறிப்பு

அ. வினைத் தொகை

ஆ. பண்புத் தொகை

இ. உவமைத் தொகை

ஈ. உம்மைத் தொகை

 

23. பொருத்த மானதை தேர்ந்தெடு

நீரின்றி அமையாது உலகு- 1.திருவள்ளுவர்

நீரின்றி அமையாது யாக்கை-2. ஒளவையார்

மாமழை போற்றுதும்-3. இளங்கோவடிகள்

அ. 1,2

ஆ. 2,1

இ. 1,3,

ஈ. 2,3

24. உலக சுற்றுச்சூழல் தினம்

அ. ஜுன் 5

ஆ. மார்ச் 20

இ. அக்டோபர் 5

ஈ. பிப்ரவரி 2

25.கிராண்ட் அணைகட் என்று அழைக்கப்படுவது

அ. பக்ரா நங்கல்

ஆ. ஹிராகுட்

இ. சர்தார் சரோவர்

ஈ. கல்லணை

26. இந்திய நீர்பாசனத்தின் தந்தை

அ. பென்னிகுயிக்

ஆ. விஸ்வேஸ்வரய்யா

இ. சர். பக்கிள்

ஈ. சர். ஆர்தர் காட்டன்

27. முல்லை பெரியார் அணை கட்டியவர்

அ. பெரியார்

ஆ. காமராஜர்

இ. பென்னிகுயிக்

ஈ. இவற்றில் எதுவுமில்லை

28. மிசை என்பதன் எதிர்ச்சொல் என்ன?

அ. கீழே

ஆ. மேலே

இ. இசை

ஈ. வசை

29. விசனம் என்பதன் பொருள்

அ. வேதனை

ஆ. மகிழ்ச்சி

இ. ஏக்கம்

ஈ. கவலை

30. பாரதியாரின் வழிதோன்றலாகவும், பாரதிதாசன் மாணவராகவும் இருந்தவர்

அ. கவிஞர் தமிழ் ஒளி

ஆ. மு. வரதராசனார்

இ.மு.மேத்தா

ஈ. அப்துல் ரகுமான்

31. திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்

அ. அபிராமி பட்டர்

ஆ. சுந்தரர்

இ. நம்பியாண்டார் 

ஈ.சேக்கிழார்


32. திருத்தொண்டர் தொகை பாடியவர்

அ. அபிராமி பட்டர்

ஆ. சுந்தரர்

இ. நம்பியாண்டார் நம்பி

ஈ. சேக்கிழார்

33. பெரியபுராணத்தில் திருநாடு என்று குறிப்பிடுவது

அ.சோழநாடு

ஆ. சேர நாடு

இ. பாண்டிய நாடு

ஈ. தொண்டை நாடு

34. சேக்கிழார் வாழ்ந்த காலம்

அ. 10 ம் நூற்றாண்டு

ஆ. 11 ம் நூற்றாண்டு

இ. 12ம் நூற்றாண்டு

ஈ.15 ம் நூற்றாண்டு

35. பக்திச்சுவை நனி சொட்டடச் சொட்டப் பாடிய கவி வலவ என மீனாட்சி சுந்தரனார் யாரை புகழ்கிறார்

அ. அபிராமி பட்டர்

ஆ. சுந்தரர்

இ. நம்பியாண்டார் நம்பி

ஈ. சேக்கிழார்

36. மகாவித்துவான் என்று போற்றப்படுபவர்

அ. சேக்கிழார்

ஆ. சுந்தரர்

இ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை

ஈ. நம்பியாண்டார் நம்பி

37. நீர்நாடு என்று போற்றப்படும் நாடு

அ. பாண்டிய நாடு

ஆ. சேர நாடு

இ. சோழ நாடு

ஈ. தொண்டை நாடு

38. சேக்கிழார் யாருடைய அமைச்சரவையில் இருந்தார்

அ. முதலாம் குலோத்துங்கன்

ஆ. இரண்டாம் குலோத்துங்கன்

இ. கிருஷ்ண தேவராயர்

ஈ. முதலாம் மகேந்திர வர்மன்

39. அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயர் கொண்டவர்

அ. சேக்கிழார்

ஆ. சுந்தரர்

இ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை

ஈ. நம்பியாண்டார் நம்பி

40. கூற்று 1: சேக்கிழார் உத்தமச் சோழ பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்

கூற்று 2: தேய்வச் சேக்கிழார், தொண்டர் சீர் பரவுவார் என்பது சேக்கிழாரின் சிறப்பு பெயராகும்

அ. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

ஆ. கூற்று 1,2 தவறு

இ. கூற்று 1,2 சரி

ஈ. கூற்று 1 தவறு, கூற்று 1 சரி


41. திருத்தொண்டர் புராணம் எனப்து...…. நூழை குறிக்கும்

அ. திருத்தொண்டர் தொகை

ஆ. திருத்தொண்டர் திருவந்தாதி

இ. பெரியபுராணம்

ஈ. திருப்பாவை

42. பெரியபுராணத்தில் உள்ள காண்டங்கள் மற்றும் சருக்கங்களின் எண்ணிக்கை

அ. 4,13

ஆ. 2,13

இ. 2,14

ஈ.2,18

43. தில்லை நடராஜர் பெருமான் “ உலகெலாம் என அடியெடுத்து கொடுக்க பாடப்பெற்ற நூல் என்று மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடும் நூல்

அ. திருத்தொண்டர் தொகை

ஆ. திருத்தொண்டர் திருவந்தாதி

இ. பெரியபுராணம்

ஈ.திருப்பாவை

44. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள்... . எனப்படும்

அ. பதினெண் கீழ் கணக்கு

ஆ. பதினெண் மேற் கணக்கு

இ. சிற்றிலக்கியங்கள்

ஈ. ஐபெரும் காப்பியங்கள்

45. புறநானூறு க்கு கடவுள் வாழ்த்து பாடியவர்

அ. நக்கீரர்

ஆ. பாரதம் பாடிய பெருந்தேவன

இ. சேக்கிழார்

ஈ. கனியன் பூங்குன்றனார்

46. எட்டுத்தொகை நூல்களில் புறம் சார்ந்த நூல்கள்

அ. பதிற்றுப்பத்து

ஆ. கலித்தொகை

இ. புறநானூறு

ஈ.அ மற்றும் இ

47. ஜி. யூ. போப் அவர்களுக்கு தமிழ்ப்பற்று ஏற்படக் காரணமான நூல்

அ. அகநானூறு

ஆ. புறநானூறு

இ. பதிற்றுப்பத்து

ஈ. ஐங்குறுநூறு

48. மல்லல் மூதூர் வயவேந்தே இதில் கோடிட்ட சொல்லின் பொருள்

அ.மறுமை

ஆ. பூவரசு மரம்

இ. வளம்

ஈ.பெரிய

49. பண்டைய தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டு கருவூலம் என்று போற்றப்படும் நூல்

அ. அகநானூறு

ஆ. புறநானூறு

இ. சிலப்பதிகாரத்தில்

ஈ. கம்பராமாயணம்


50. பொருத்துக

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே1.நக்கீரனார்

உண்பதுநாழி, உடுப்பது இரண்டே2.குடபுலவியனார்

யாதும் ஊரே யாவரும் கேளீர்-3.கனியன் பூங்குன்றனார்

அ. 1,2,3

ஆ. 3,2,1

இ.3,1,2

ஈ. 2,1,3

51.பொருந்தாத இணை எது?

அ. ஏறுகோள் - எருதுகட்டி

ஆ. திருவாரூர்- கரிக்கையூர்

இ. ஆதிச்சநல்லூர்- அரிக்கமேடு

ஈ. பட்டிமன்றம்- பட்டிமண்டபம்

52. முறையான தொடர் அமைப்பினை குறிப்பிடுக

அ. தமிழர்களின் வீர விளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்

ஆ. தமிழர்களின் வீர விளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான

இ. தொன்மையான வீர விளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்

ஈ. தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு ஏறுதழுவுதல்

53. திமிழுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம்.... ல் உள்ளது

அ. கோத்தகிரி

ஆ. கரிகையூர்

இ. ஆதிச்சநல்லூர்

ஈ. கல்லூத்து மேட்டுப்பட்டி

54. பொருத்தம் இல்லாது எது

அ. ஜல்லிக்கட்டு

ஆ. மாடுவிடுதல்

இ. மஞ்சுவிரட்டு

ஈ. சேவல் சண்டை

55. காளை சண்டையை தேசிய விளையாட்டாக கொண்ட நாடு

அ. இந்தியா

ஆ. சீனா

இ. ஸ்பெயின்

ஈ. அமெரிக்கா

56. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சி காவியம்

அ. சீவகசிந்தாமணி

ஆ. சிலப்பதிகாரம்

இ. மணிமேகலை

ஈ. வளையாபதி

57. மணிமேகலை கூறும் கருத்து

அ. அன்பே சிவம்

ஆ. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

இ. பசியும் நோயும் பகையும் நீங்குக

ஈ. யாதும் ஊரே யாவரும் கேளிர்

58. மணிமேகலை யில் உள்ள காதைகள்

அ. 10

ஆ. 20

இ. 30

ஈ. 40

59. உலகப் பண்பாட்டிற்கு தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல்

அ. மணிமேகலை

ஆ. சிலப்பதிகாரம்

இ. திருக்குறள்

ஈ. கம்பராமாயணம்


60. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல்

அ. மணிமேகலை

ஆ. சிலப்பதிகாரம்

இ. திருக்குறள்

ஈ. கம்பராமாயணம்

61. கூற்று 1: திருக்குறளுக்கு தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு முற்காலத்தில் உறை எழுதப்பட்டுள்ளது

கூற்று 2: இவ்வுறைகளுள் பரிப்பெருமாள் எழுதிய உரையே சிறந்தது.

அ. கூற்று 1,2 சரி

ஆ. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

இ. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

ஈ. கூற்று 1,2 தவறு

 

62. திருக்குறள்..... நூல்களுள் ஒன்று

அ. சிற்றிலக்கியம்

ஆ. பதினெண் மேற் கணக்கு

இ. பதினெண் கீழ் கணக்கு

ஈ. ஐம்பெரும் காப்பியம்

 

63. திருக்குறளை போற்றும் நூல்

அ. திருவள்ளுவமாலை

ஆ. சிலப்பதிகாரம்

இ. மணிமேகலை

ஈ. இவற்றில் எதுவுமில்லை

 

64. நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், மாதானபங்கி, பெருநாவலர் என்று போற்றப்படுபவர்

அ. கம்பர்

ஆ. இளங்கோவடிகள்

இ. திருவள்ளுவர்

ஈ. சேக்கிழார்

 

65. பேதையார் என்பதன் இலக்கண குறிப்பு

அ. வினையாலணையும் பெயர்

ஆ. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

இ. பண்புத்தொகை

ஈ. வியங்கோள் வினைமுற்று

 

66. அகழ்வாரை தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை

-இக்குறள் எவ்வகை அணி

அ. சொற்பொருள் பின்வருநிலையணி

ஆ. உவமையணி

இ. உருவக அணி

ஈ. வஞ்சப் புகழ்ச்சியணி

 

67. நாணமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்

இக்குறள் எவ்வகை அணி

அ. சொற்பொருள் பின்வருநிலையணி

ஆ. உவமையணி

இ. உருவக அணி

ஈ. வஞ்சப் புகழ்ச்சியணி

 

68. ஏறுகோள் குறித்து இடம்பெறும் நூல்களில் பொருந்தாது எது

அ. கலித்தொகை

ஆ. சிலப்பதிகாரம்

இ. புறப்பொருள்

ஈ. மணிமேகலை

 

69. மணிமேகலை நூலின் ஆசிரியர்

அ. இளங்கோவடிகள்

ஆ. செயம்கொண்டார்

இ. சீத்தலைச் சாத்தனார்

ஈ. கணிதமேதாவியார்


70. இரட்டை காப்பியங்கள் என்பது

அ. சிலப்பதிகாரம்

ஆ. கலித்தொகை

இ. மணிமேகலை

ஈ. அ மற்றும் இ

 

71. மணிமேகலை எந்த சமயம் சார்ந்த நூல்

அ. பௌத்தம்

ஆ. சமணம்

இ. கிருத்துவம்

ஈ.சீக்கியம்

 

72. இளங்கோவடிகள் யாரை தண்டமிழ் ஆசான் சாத்தன், நன்னூற் புலவன் என்று பாராட்டி உள்ளார்

அ. கம்பர்

ஆ. திருவள்ளுவர்

இ. சீத்தலைச் சாத்தனார்

ஈ. சேக்கிழார்

 

73. கீழடி எந்த மாவட்டத்தில் உள்ளது

அ. தேனி

ஆ. திருநெல்வேலி

இ. சிவகங்கை

ஈ. புதுக்கோட்டை

 

74. உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்

இவ்வரிகள் இடம் பெறும் நூல்

அ. சிலப்பதிகாரம்

ஆ. மணிமேகலை

இ. வளையாபதி

ஈ. குண்டலகேசி

 

75. ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்த இடம்

அ. கீழடி

ஆ. அரிக்கமேடு

இ. ஆதிச்சநல்லூர்

ஈ. பல்லாவரம்

 

76. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் தொடர்புடைய ஊர்

அ. கீழடி

ஆ. அரிக்கமேடு

இ. ஆதிச்சநல்லூர்

ஈ. பல்லாவரம்

 

77. நன்னூல் இயற்றியவர்

அ. ஐயனாரிதனார்

ஆ. வைத்திய நாத தேசிகர்

இ. பவணந்தி முனிவர்

ஈ. அமிதசாகரர்

 

78. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்

அ. 5

ஆ. 4

இ. 3

ஈ2

 

79. ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் உள்ளது

அ. மதுரை

ஆ. தூத்துக்குடி

இ. திருநெல்வேலி

ஈ. புதுக்கோட்டை

 

80. கரிக்கையூர் பாறை ஓவியம் எந்த மாவட்டத்தில் உள்ளது

அ. தேனி

ஆ. நீலகிரி

இ. கோயம்புத்தூர்

ஈ. மதுரை

 

81.தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

அ. தேசிய திறனாய்வு தேர்வு

ஆ. ஊரக திறனாய்வு தேர்வு

இ. தேசிய திறனறி கல்வி உதவித் தொகை

ஈ. இவை மூன்றும்

 

82. தொலைநகல் ( fax) முதன் முதலில் எந்த இரு நகரங்களுக்கு இடையில் அறிமுகமானது

அ. பெர்லின்- ஆம்ஸ்டர்டாம்

ஆ. ஸ்டாக்ஹோம்- வியன்னா

இ. பாரிஸ் லியான்

ஈ. இலண்டன் - பாரிஸ்

 

83. தானியங்கி பண இயந்திரத்தை ( ATM) நிறுவியவர்

அ. செஸ்டர் கார்ல்சன்

ஆ. ஸ்டீபன் ஹாக்கின்ஸ்

இ. ஸ்டீவ் ஜாப்ஸ்

ஈ. ஜான் ஷெப்பர்டு பாரன்

 

84. வைரமுத்து எழுதி 2003 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

அ. கள்ளிக்காட்டு இதிகாசம்

ஆ. வைகறை மேகங்கள்

இ. திருத்தி எழுதிய தீர்ப்புகள்

ஈ. கொடி மரத்தின் வேர்கள்

 

85. பட்டுப் பூச்சியாய் உருப்பெருவது

அ. தேனீ

ஆ. வண்டு

இ. கூட்டுப்புழு

ஈ. ஈசல்


86. உணர்ந்தோர் என்பதன் இலக்கண குறிப்பு

அ. வினையாலணையும் பெயர்

ஆ. பண்புத்தொகை

இ. ஈரு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்

ஈ.வியங்கோள் வினைமுற்று

 

87. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனோடு நாவே இவ்வடிகளில் அதனோடு என்பது எதனைக் குறிக்கிறது

அ. நுகர்தல்

ஆ. தொடு உணர்வு

இ. கேட்டல்

ஈ. காணல்

 

88.பொருந்தாத இணை கண்டறிக

அ. ஈரறிவு உயிர்- சிப்பி, நத்தை

ஆ. நான்கறிவு உயிர்- நண்டு, தும்பி

இ. ஐந்தறிவு உயிர்- புல், மரம்

ஈ. மூவறிவு உயிர்- கரையான் எறும்பு

 

89. பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது

அ. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நூல் தொல்காப்பியம்

ஆ. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள், என மூன்று அதிகாரங்கள் உண்டு

இ. தொல்காப்பியத்தில் அகம் புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள் விளக்கப்பட்டுள்ளன

ஈ. கடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது தொல்காப்பியம்


90. தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள்

அ. 30

ஆ.33

இ. 24

ஈ 27

 

91. ஆர்யபட்டா என்ற இந்திய முதல் செயற்கை கோள் ஏவுவதற்கு காரணமானவர்

அ. விக்ரம் சாராபாய்

ஆ. விஸ்வேஸ்வரய்யா

இ. கிரண் குமார்

ஈ. ராதாகிருஷ்ணன்

 

92. திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் ஆராய்ச்சி மையம்

அ. பாபா அணு ஆராய்ச்சி மையம்

ஆ. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்

இ. சதீஷ் தவன் விண்வெளி ஏவுதள மையம்

ஈ. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்

 

93. இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்

அ. கே. ஆர். நாராயணன்

ஆ. பிரதீபா பட்டில்

இ. வெங்கட்ராமன்

ஈ. அப்துல் கலாம்

 

94. மங்கள்யான் திட்ட இயக்குனர்

அ. சிவன்

ஆ. இராதாகிருஷ்ணன்

இ. அருணன் சுப்பையா

ஈ.வளர்மதி


95. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்

அ. விக்ரம் சாராபாய்

ஆ. விஸ்வேஸ்வரய்யா

இ. கிரண் குமார்

ஈ.ராதாகிருஷ்ணன்

 

96. இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர்

அ. சிவன்

ஆ. மயில்சாமி அண்ணாதுரை

இ. அப்துல் கலாம்

ஈ. விக்ரம் சாராபாய்

 

97. 2015 ல் தமிழக அரசின் அப்துல் கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல் அறிஞர்

அ. சிவன்

ஆ. மயில்சாமி அண்ணாதுரை

இ. வளர்மதி

ஈ. கிரண் குமார்

 

98. சந்திராயன் -1 திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்

அ. மயில்சாமி அண்ணாதுரை

ஆ. சிவன்

இ. அப்துல் கலாம்

ஈ. வளர்மதி

99.பொருத்துக

அக்னி சிறகுகள்- 1. மயில்சாமி அண்ணாதுரை

மின்மினி-2. சுஜாதா

ஏன் எதற்கு எப்படி-3. ஆயிஷா நடராஜன் கையருகே நிலா-4. அப்துல் கலாம்

அ. 1,2,3,4

ஆ. 4,3,2,1

இ. 2,1,3,4

ஈ. 3,4,2,1

 

100.ஜெராக்ஸ் இயந்திரம்... என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது

அ. ஜியோவான்னி காசில்லி

ஆ. செஸ்டர் கார்ல்சன்

இ. ஜான் ஷெப்பர்டு பாரன்

ஈ. ஸ்டீவ் ஜாப்ஸ்

No comments:

Post a Comment