Pages

Friday, September 2, 2022

7th Std Social Science Term 2 Solution | Lesson.1 விஜயநகர், பாமினி அரசுகள்

7th Std Social Science Term 2 Solution | Lesson.1 விஜயநகர், பாமினி அரசுகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?

  1. புக்கர்
  2. தேவராயா –II
  3. ஹரிஹரர்-II
  4. கிருஷ்ண தேவராயர்

விடை :  தேவராயா –II

2. விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?

  1. யானை
  2. குதிரை
  3. பசு
  4. மான்

விடை : குதிரை

3. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  1. ராமராயர்
  2. திருமலதேவராயா
  3. இரண்யம் தேவராயர்
  4. இரண்டாம் விருபாக்சராயர்

விடை :  இரண்டாம் விருபாக்சராயர்

4. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்

  1. சாளுவ நரசிம்மர்
  2. இரண்டாம் தேவராயர்
  3. குமார கம்பண்ணா
  4. திருமலைதேவராயர்

விடை :  குமார கம்பண்ணா

5. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்

  1. அலாவுதீன் ஹசன்விரா
  2. முகம்மது – I
  3. சுல்தான் பெரோஸ்
  4. முஜாஹித்

விடை :  சுல்தான் பெரோஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஆரவீடு வம்சத்தின் தலைநகரம் _______________

விடை : பெனு கொண்டா

2. விஜயநகரப் பேரரசர்களால் வெளியிட்டப்பட்ட நாணயங்களுக்கு _______________ என்று பெயர்

விடை : வராகன்

3. மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் _________ வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.

விடை : பாரசீக

4. விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை _____________ கவனித்தார்.

விடை : கெளடா

III. பொருத்துக

1. விஜயநகரா ஒடிசாவின் ஆட்சியாளர்
2. பிரதாபருத்ரா அஷ்டதிக்கஜம்
3. கிருஷ்ண தேவராயா பாண்டுரங்க மகாமத்தியம்
4. அப்துர் ரசாக் வெற்றியின் நகரம்
5. தெனாலிராமகிருஷ்ணா  பாரசீக சிற்ப கலைஞர்
விடை: 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – இ

IV. 1. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை டிக் ( √ ) இட்டுக் காட்டவும்.

கூற்று : இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது

காரணம்: விஜயநகர இராணுவம் பீரங்கிபடை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது

  1. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
  2. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
  3. காரணம் மற்றும் கூற்று தவறு
  4. காரணம் மற்றும் கூற்று சரி

விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

2. தவறான இணையைக் கண்டறியவும்

  1. பட்டு – சீனா
  2. வாசனைப் பொருட்கள் – அரேபியா
  3. விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா
  4. மதுரா விஜயம் – கங்கா தேவி

விடை : வாசனைப் பொருட்கள் – அரேபியா

3. பொருந்தாததைக் கண்டுபிடி:

அ) ஹரிஹரர் –II ஆ) மகமுது –I
இ) கிருஷ்ண தேவராயர் ஈ) தேவராயா – I

விடை : மகமுது –I

4. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டு காட்டவும்

I. பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன என பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

II. விஜயநகர, பாமினிஅரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணா- துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணா- கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப் பகுதியே காரணமாக அமைந்தன.

III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.

IV. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதமஅமைச்சராக பணியாற்றினார்.

  1. I மற்றும் II சரி
  2. I, II மற்றும் III சரி
  3. II, III , மற்றும் IV சரி
  4. III , மற்றும் IV சரி

விடை  : I மற்றும் II சரி

V. சரியா? தவறா?

1. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆவார்கள்

விடை : தவறு

2. இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார்

விடை : தவறு

3. அஸ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிட தகுந்தவராவார்

விடை : சரி

4. விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.

விடை : சரி

5. பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன.

விடை : சரி

 

No comments:

Post a Comment