Pages

Sunday, September 11, 2022

10th பரிபாடல்

 பரிபாடல் 

பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.

பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார்.

இந்நூல் “ஓங்கு பரிபாடல்” எனும் புகழுடையது.

இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.

உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.

இந்த அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. வெளியே நின்று பார்த்தோமெனில், சிறுதூசிபோலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும். 

அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924இல் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.

I. சொல்லும் பொருளும்

  • விசும்பு – வானம்
  • ஊழி – யுகம்
  • ஊழ – முறை
  • தண்பெயல் – குளிர்ந்த மழை
  • ஆர்தருபு – வெள்ளததில் மூழ்கிக் கிடந்த
  • பீடு – சிறப்பு
  • ஈண்டி – செறிந்து திரண்டு

II. இலக்கணக் குறிப்பு

  • ஊழ்ஊழ் – அடுக்குத்தொடர்
  • வளர்வானம் – வினைத்தொகை
  • செந்தீ – பண்புத்தொகை
  • வரா (ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • தோன்றி – வினையெச்சம்
  • மூழ்கி – வினையெச்சம்
  • கிளர்ந்த – பெயரெச்சம்

III. பகுபத உறுப்பிலக்கணம்

கிளர்ந்த =  கிளர் + த் (ந்) + த் + அ

  • கிளர் – பகுதி
  • த் – சந்தி
  • த் (ந்) – ந் ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

IV. பலவுள் தெரிக

பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

  1. வானத்தையும் பாட்டையும்
  2. வானத்தையும் புகழையும்
  3. வானத்தையும் பூமியையும்
  4. வானத்தையும் பேரொலியையும்

விடை : வானத்தையும் பேரொலியையும்

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பரிபாடல் _________ நூல்களுள் ஒன்று.

விடை : எட்டுத்தொகை

2. பரிபாடலை எழுதியவர் _________

விடை : கீரந்தையார்

3. பரிபாடல் _________ என்னும் புகழுடையது.

விடை : ஓங்கு பரிபாடல்

4. _________ என்பவர் அமெரிக்க வானியல் அறிஞர்.

விடை : எட்வின் ஹப்பிள்

5. முதல் பூதம் எனப்படுவது _________ ஆகும்.

விடை : வானம்

III. பொருத்துக

1. விசும்பு யுகம்
2. ஊழி முறை
3. பீடு செறிந்து திரண்டு
4. ஈண்டி சிறப்பு
5. ஊழ் வானம்
விடை : 1 – உ, 2 – அ, 3 – ஈ, 4 – இ, 5 – ஆ

 

 

 

No comments:

Post a Comment