Pages

Thursday, July 29, 2021

10th Science - இயக்க விதிகள்


     

    இயக்க விதிகள்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

    1. கீழ்க்கண்டவற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது

    அ) பொருளின் எடை

    ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்

    இ) பொருளின் நிறை

    ஈ) அ மற்றும் ஆ

    2. கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது.

    அ) உந்த மாற்று வீதம்

    ஆ) விசை மற்றும் கால மாற்ற வீதம்

    இ) உந்த மாற்றம்

    ஈ) நிறை வீத மாற்றம்

     

    3. கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது.

    அ) ஓய்வுநிலையிலுள்ள பொருளில்

    ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்

    இ) அ மற்றும் ஆ

    ஈ) சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்

     

    4. உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு

    அ) கணத்தாக்குவிசை

    ஆ) முடுக்கம்

    இ) விசை

    ஈ) விசை மாற்றவீதம்

     

    5. விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது

    அ) நீச்சல் போட்டி

    ஆ) டென்னிஸ்

    இ) சைக்கிள் பந்தயம்

    ஈ) ஹாக்கி

     

    6. புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms−2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.

    அ) cms-2 ஆ) NKg−1    இ) N m−2 kg-1        ஈ) cm−2 s−2

     

    7. ஒரு கிலோகிராம் எடை என்பது _________ ற்கு சமமாகும்.

    அ) 9.8 டைன் ஆ) 9.8 x 104 N    இ) 98 x 104 டைன்      ஈ) 980 டைன்

     

    8. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.

    அ) 4M       ஆ) 2M       இ) M/4       ஈ) M

     

    9. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?

    அ) 50% குறையும்

    ஆ) 50% அதிகரிக்கும்

    இ) 25% குறையும்

    ஈ) 300% அதிகரிக்கும்.

     

    10. ராக்கெட் ஏவுதலில் _______________ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.

    அ) நியூட்டனின் மூன்றாம் விதி

    ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

    இ) நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு

    ஈ) அ மற்றும் இ

     

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

    1. இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு ____________ தேவை. (விசை)

    2. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் தீடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு ____________ மூலம்

    விளக்கப்படுகிறது. (இயக்கத்தில் நிலைமம்)

    3. மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் __________ குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் __________

    குறியிலும் குறிக்கப்படுகிறது.விடை:எதிர், நேர்

    4. மகிழுந்தின் சக்கரத்தின் சுழற்சி வேகத்தினை மாற்ற ____________ பயன்படுகிறது. (பற்சக்கரம்)

    5. 100 கிகி நிறையுடைய மனிதனின் எடை புவிப்ப ரப்பில் ____________ அளவாக இருக்கும். (980 நியூட்டன்)

    தீர்வு:புவியின் மீது அம்மனிதனின் எடை W=mg; W=100 x9.8;W=980N

     

    IV. பொருத்துக.

    அ) நியூட்டனின் முதல் விதி - ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது. (ஈ)

    ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி - பொருட்களின் சமநிலை (அ)

    இ) நியூட்டனின் மூன்றாம் விதி - விசையின் விதி (ஆ)

    ஈ) நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி - பறவை பறத்தலில் பயன்படுகிறது (இ)

     

    VI. சுருக்கமாக விடையளி

    1. நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?

    ஒவ்வொரு பொருளும் தன் மீது சமன் செய்யப்படாத புற விசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையையோ, அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை ‘நிலைமம்’ என்றழைக்கப்படுகிறது.

    வகைகள்:

    அ) ஓய்வில் நிலைமம் ஆ) இயக்கத்தில் நிலைமம் இ) திசையில் நிலைமம்:

    2. செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?

    1) ஒத்த இணை விசைகள்:ஒரே திசையில் பொருள் மீது செயல்படும் இணை விசைகள்.

    2) மாறுபட்ட இணை விசைகள்:எதிரெதிர் திசையில் பொருள் மீது செயல்படும் இணை விசைகள்

     

    3. 5N மற்றும் 15 N விசை மதிப்புடைய இரு விசைகள் எதிரெ திர் திசையில் ஒரே நேரத்தில் பொருள் மீது செயல்படுகின்றன. இவைகளின் தொகுபயன் விசை மதிப்பு யாது? எத்திசையில் அது செயல்படும்?

    பொருள் மீது செயல்படும் இரு விசைகள்

    F1 = 5N, F2 =15N

    தொகுபயன் விசை F =F2 -F1 ஃ F2 - F1

    =15-5

    F = 15-5

    F = 10N

    தொகுபயன் விசையானது அதிக எண் மதிப்புடைய 15N விசையின் திசையில் செயல்படும்.

    4. நிறை – எடை, இவற்றை வேறுபடுத்துக.


    நிறைஎடை
    பொருளில் அடங்கியுள்ள    

    பருப்பொருளின் அளவு

    பொருளின் மீது செயல்படும்

    புவியீர்ப்பு விசையின் மதிப்பு

    SI அலகு கிகி (Kg) SI அலகு நியூட்டன் (N) 
     
    5. இரட்டையின் திருப்புத் திறன் வரையறு.
    * இரட்டையின் சுழற்விளைவு, அதன் திருப்புத் திறன் மதிப்பு கொண்டு அளவிடப்படுகிறது.
    * இம்மதிப்பு ஏதேனும் ஒரு விசையின் எண்மதிப்பு மற்றும் இணை விசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு, இவைகளின் பெருக்கற்பலனுக்குச் சமமாகும்.
    * இரட்டையின் திருப்புத்திறன் (M)) = விசையின் எண் மதிப்பு (F) இணை விசைகளுகு இடையே உள்ள செங்குத்துத் தொலைவு (S)
                            M = F X S
    இதன் SI  அலகு நியூட்டன் மீ
     
    6. திருப்புத்திறன் தத்துவம் வரையறு.
    திருப்புத் திறன் தத்துவம் :
    * சமநிலையில் உள்ள பொருள் ஒன்றின் மீது சம மதிப்புள்ள அல்லது சம மதிப்பற்ற விசைகள் இணையாகவோ அல்லது எதிர் இணையாகவோ செயல்பட்டால், அப்பொருளின் மீது செயல்படும் மொத்த வலஞ்சுழி திருப்புத் திறனும், இடஞ்சுழி திருப்புத்திறனும் சமமாக இருக்கும்.
    * திருப்புத்திறன்களின் தத்துவத்தின்படி
    வலஞ்சுழி திருப்புத் திறன் = இடஞ்சுழி திருப்புத் திறன்
                            F1 x d2  =   F 2 x d2
     
    7. நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு.
    பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும். 
                        F = m × a
     
    8. பெரிய வாகனங்களில் திருகுமறைகளை (nuts) சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு (spanner) பயன்படுத்தப்படுவது ஏன்?
    (i) விசையின் திருப்புத்திறன், திருகுக்குறடின் கைப்பிடி நீளத்தைப் பொறுத்து அதிகரிக்கிறது. ஆகவே திருகுக்குறடின் கைப்பிடி நீளமாக இருக்கிறது. 
    (ii) விசையின் திருப்புத்திறன் 
                                t = F × d 
     
    9. கிரிக்கெட் விளையாட்டில் மேலிருந்து விழும் பந்தினை பிடிக்கும்போது, விளையாட்டு வீரர் தம் கையினை பின்னோக்கி இழுப்பது ஏன்?
    விசையினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க, விளையாட்டு வீரர் தம் கையினை பின்னோக்கி இழுக்கிறார். இதனால் வேகமாக வரும் பந்து, அவரது கையில் வந்து மோதும் காலம் சற்று அதிகரித்து கணத்தாக்கு விசையின் அளவைக் குறைக்கிறது. 
     
    10. விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார் ?
     (i) விண்வெளி வீரர் உண்மையில் மிதப்பதில்லை.
     (ii) விண்கலம் மிக அதிக சுற்றியக்க திசைவேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர் அக்கலத்துடன் இணைந்து சம வேகத்தில் நகர்கிறார். (iii) அவரது முடுக்கம், விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால், அவர் தடையின்றி விழும் நிலையில் (free fall) உள்ளார். 
    (iv) அப்போது அவரது தோற்ற எடை மதிப்பு சுழியாகும். ( R = 0 ) . எனவே அவர் அக்கலத்துடன் எடையற்ற நிலையில் காணப்படுகிறார்.
     

    விரிவான விடையளி:

    ராக்கெட் ஏவுதலை விளக்குக.
    (i) ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி, இவை இரண்டும் பயன்படுகின்றன. 
     
    (ii) ராக்கெட்டுகளில் உந்து கலனில் (propellant tank)) திரவ அல்லது திட எரிபொருள்கள் நிரப்பப்படுகின்றன. அவை எரியூட்டப்பட்டதும், வெப்ப வாயுக்கள் ராக்கெட்டின் வால் பகுதியில் இருந்து அதிக திசைவேகத்தில் வெளியேறுகின்றன. 
     
    (iii) அவை மிக அதிக உந்தத்தை உருவாக்குகின்றன. 
     
    (iv) இந்த உந்தத்தை சமன் செய்ய, அதற்கு சமமான எதிர் உந்துவிசை எரிகூடத்தில் (Combustion chamber)) உருவாகி, ராக்கெட் மிகுந்த வேகத்துடன் முன்னோக்கி பாய்கிறது. 
     
    (v) ராக்கெட் உயர பயணிக்கும் போது அதில் உள்ள எரிபொருள் முழுவதும் எரியும் வரை அதன் நிறை படிப்படியாக குறைகிறது. 
     
    (vi)  உந்த அழிவின்மை விதியின் படி, நிறை, குறையக் குறைய, அதன் திசைவேகம் படிப்படியாக அதிகரிக்கிறது. 
     
    (vii)  ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ராக்கெட்டானது புவியின் ஈர்ப்பு விசை யினை தவிர்த்து விட்டு செல்லும் வகையில், அதன் திசைவேக மதிப்பு உச்சத்தை அடைகிறது. இது விடுபடு வேகம் (escape speed) எனப்படுகிறது.





     

    No comments:

    Post a Comment