Pages

Sunday, October 11, 2020

Alphabet அல்லது Alphabets இதில் எது சரி?

A, B, C - Z இவை அனைத்தையுமே நீங்கள் Alphabets எனக் கூறுபவரா? இது தவறு இனிமேல் திருத்திக் கொள்ளுங்கள். ஏன் தவறு காணலாம், வாங்க.

Alphabet என்பது கிரேக்க வார்த்தையான Alpha மற்றும் Beta ஆகிய இரு வார்த்தையின் சுருக்கமே ஆகும். இதன் அர்த்தம் ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களின் / குறியீடுகளின் தொகுப்பு என்பது ஆகும்.

The word Alphabet means a group of letters or symbols that are used in a language.

எனவே A-Z வரையிலான அனைத்து எழுத்துக்களையும் நீங்கள் குறிப்பிடும் போது Alphabet என்றே கூறவேண்டும்.

சரி அப்படி எனில் Alphabets என்று கூறவே கூடாதா எனில் கூறலாம் எப்போது எனில் இரு வேறு மொழிகளுக்கான Alphabet களைக் கூறும் போது நீங்கள் Alphabets என்று கூற வேண்டும் .

சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் ஒரு மொழிக்கான எழுத்துக்களைக் குறிக்கும் போது Alphabet- This is the alphabet of English.

இரு மொழிகளுக்கான எழுத்துக்களைக் குறிக்கும் போது Alphabets

Those are the alphabets of French and Italian

 

 

 

 

 

 

 

 

 

ஆன்லைன் தேர்வுகள்   ஆங்கிலம் அறிவோம்   Grammar  Useful Articles

Softwares

 

No comments:

Post a Comment