Pages

Thursday, September 10, 2020

நீட் 2020- தேர்வு எழுதும் மாணவர்கள் கவனித்திற்கு - தேர்வறைக்கு என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்?

 

கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்துவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டதனால் வரும் செப்டம்பர் 13 ஆம் நாள் நீட் தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட யு.ஜி. மருத்துவ ஆர்வலர்களுக்காக தேசிய பரிசோதனை நிறுவனம் இந்த தேர்வை நடத்துகிறது மற்றும் தேர்வு எழுதிம் போது மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அரசு ஆலோசனையின் படி சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நீட் தேர்வர்கள் தங்கள் உடல்நிலை மற்றும் சமீபத்திய பயண வரலாறு ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஒரு சுய அறிவிப்பை உடன் கொண்டுவர வேண்டும் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

நீட் 2020 தேர்வு அறைக்கு என்ன கொண்டு செல்ல வேண்டும்?

நீட் - 2020 நுழைவுச் சீட்டு

A4 அளவு தாளில் சுய அறிவிப்பு படிவம் (self-declaration form)

விண்ணப்ப படிவத்தில் பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தின் நகல்

சரியான புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று

சானிடிசர் (50 மில்லி)

நீர் பாட்டில் (உள்ளே உள்ள நீர் வெளியே தெரியும் வகையிலான பாட்டிலாக இருக்க வேண்டும்).

முகமூடி மற்றும் கையுறைகள்

PwD (உடல் நலக் குறைபாடு உடையவர்கள்) சான்றிதழ் மற்றும் உதவி எழுத்தாளர் தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் கொண்டு செல்ல வேண்டும்.

எவை அனுமதி கிடையாது?

நீட் தேர்வர்கள் கூடுதல் தனிப்பட்ட பொருட்களை நீட் தேர்வு அறைக்கு கொண்டு செல்லக் கூடாது. இதில் கைப்பைகள், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், நகைகள், தொப்பிகள் போன்றவை அடங்கும்.

உடை கட்டுப்பாடு

தேர்வர்கள் கால்களை மறைக்கும் வகையிலான காலணிகளை அணியக் கூடாது இதில் ஷூக்களும் அடங்கும். குறைந்த குதிகால் (ஹீல்ஸ்) கொண்ட காலணிகளை அணியலாம்.

லேசான அரை சட்டைகளை அணிந்திருக்க வேண்டும். முழுக்கால் சட்டை அணிந்து வரக் கூடாது.

தங்களது மதம் அல்லது பிற காரணங்களுக்காக குறிப்பிட்ட ஆடைகளை அணிய நேரிட்டால் முன்னரே தேர்வு கண்காணிப்பாளரிடம் கூற வேண்டும்.

பிற விளக்கங்கள்

குழப்பங்களைத் தவிர்க்க தேர்வர்கள் ஒரு நாள் முன்னரே தேர்வு மையத்தினை பார்வையிட அணுமதிக்கப்படுவர்.

சுய அறிவிப்பு படிவத்தை நீட் தேர்வர்கள் பூர்த்தி செய்து தேர்வு நடைபெறும் இடத்தில் அறைக் கண்காணிப்பாளர் முன் கையெழுத்திட வேண்டும்.

ஸ்கைரபர் (உதவி எழுத்தாளர்) தங்கள் சுய அறிவிப்பு படிவங்களையும் கொண்டு வர வேண்டும்

நீட் 2020 தேர்வு முடிந்ததும், தேர்வர்கள் தேர்வு கையேட்டை ( test booklet) மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அவர்கள் தங்கள் நுழைவு அட்டை மற்றும் ஓஎம்ஆர் தாள் (அசல் மற்றும் அலுவலக பிரதிகள்) அறைக் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


No comments:

Post a Comment