Pages

Friday, August 21, 2020

தேசிய ஆட்சேர்ப்பு முகமை (NRA) பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

 

2020 ஆகஸ்ட் 19 புதன்கிழமை மத்திய அமைச்சரவை, வேலை தேடுபவர்களுக்கு உதவுவதற்காக தேசிய ஆட்சேர்ப்பு முகமை (என்ஆர்ஏ) என்பதனை அமைக்க ஒப்புதல் அளித்தது. குழு பி மற்றும் சி (தொழில்நுட்பமற்ற) பதவிகளுக்கான பணியாளர்களை தரம் பிரிக்க அல்லது அல்லது பட்டியலிட பொதுத் தகுதித் தேர்வு எனும் ஒரு தேர்வினை (CET) நடத்தும்.

ரயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகம் / நிதி சேவைகள் துறை, பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி), ரயில்வே பணியாளர் வாரியங்கள் (ஆர்.ஆர்.பி) மற்றும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) ஆகியவற்றின் பிரதிநிதியாக இந்த அமைப்ப் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

பொதுத் தகுதித் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்.

பல்வேறு நிலைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அதாவது பட்டதாரி நிலை, 12 வது தேர்ச்சி பெற்றோர் நிலை மற்றும் 10 வது தேர்ச்சி பெற்றோர் நிலை ஆகியவற்றிற்கு வெவ்வேறு சி.இ.டி தேர்வு நடைபெறும்.

சி.இ.டி 12 முக்கிய இந்திய மொழிகளில் நடத்தப்படும். ஆனால் மத்திய அரசு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படும்.

இது கிராமப்புற, பின்தங்கிய பணியாளர்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த அணுகலை உறுதி செய்யும்.

தொழில்நுட்பமற்ற பதவிகளுக்கும் பல்வேறு நிலைகளில் அதாவது பட்டப்படிப்பு, உயர்நிலை (12 வது தேர்ச்சி) மற்றும் இடைநிலை வகுப்பு (10 வது தேர்ச்சி) பணியாளர்களுக்கு என தனித் தனி சி இ டி தேர்வுகள் நடத்தப்படும்.


 

(photo:pib)


தேசிய ஆட்சேர்ப்பு முகமையின் கீழ் வரும் அமைச்சகங்கள்

·         பணியாளர்கள் தேர்வு ஆணையம்

·         ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்

·         வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்

என்.ஆர்.ஏ எவ்வாறு செயல்படுத்தப்படும்

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தேர்வு மையம் இருக்கும். பேரார்வம் கொண்ட 117 மாவட்டங்களில் தேர்வு உள்கட்டமைப்பை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

இந்தத் தேர்வு பாணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான முதல் நிலையாகத் தான் இருக்கும். மேலும் மதிப்பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

சி.இ.டி மதிப்பெண்களை மத்திய அரசு, மாநில அரசு, யூனியன் பிரதேசங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

தற்போது அந்த பணிகளுக்கான தேர்வு எழுதுவதற்கு உள்ள அதிகபட்ச வயது தகுதி விதிமுறையுடன் ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த சி இ டி தேர்வினை எழுதலாம். SC/ST மற்றும் OBC பிரிவினர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள வயது வரம்பு தொடரும்.

தேசிய ஆட்சேர்ப்பு முகமையின் கீழ் வரும் பணிகள்

குழு பி மற்றும் சி (தொழில்நுட்பமற்ற) பதவிகளின் கீழ் வரும் அரசிதழில் பதிவு பெறாத, தொழில்நுட்பமற்ற வேலைகளை தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் உள்ளடக்கும்.

அரசிதழில் பதிவு பெறாத பணிகள் என்றால் என்ன?

மூன்றாம் வகுப்பு மற்றும் நான்காம் பிரிவின் கீழ் வரும் அதிகாரிகள் அரசிதழ் பதிவு பெறாத அலுவலர்கள் ஆவர். அரசாங்கத்தின் சார்பாக அதிகாரப்பூர்வ முத்திரையை வெளியிடுவதற்கான தனிப்பட்ட அதிகாரம் அவர்களுக்கு இல்லை. இருப்பினும், அவர்கள் நிதி ஆவணங்களுக்கு சான்றளிக்க முடியும்.

ரயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகம் / நிதிச் சேவைத் துறை, பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி), ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (ஆர்.ஆர்.பி) மற்றும் அரசுத் துறைக்கான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) ஆகியவற்றில் வேலைகள் உருவாக்கப்படும்.

சி.இ.டி மதிப்பெண்களை மத்திய அரசு, மாநில அரசு, யூனியன் பிரதேசங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்ளலாம்

தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் மாணவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்

  • மாணவர்கள் பல தேர்வுகளை எழுத வேண்டியதில்லை.
  • ஒற்றை தேர்வுக் கட்டணம் பல தேர்வுகள் எழுதுவதற்கான நிதிச் சுமையைக் குறைக்கும்.
  • பயணச் செலவுகளின் சுமையைக் குறைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வுகள் நடத்தப்படும், மேலும் பெண்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் பங்கேற்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் அனைத்துத் தேர்விற்கும் ஒரே இணையதளத்தில் பல பணிகளுக்கும் விண்ணப்பம் செய்யலாம்.
  • ஒரே நேரத்தில் இரு தேர்வுகள் நடத்தப்படுவது தவிர்க்கப்படும்.

 

tamil translation: Sri

 

No comments:

Post a Comment